அண்மைக்காலமாக ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. இன்றைய இலத்திரனியல் ஊடகங்களில் இவர்களது வீரதீரச் செயல்கள் மட்டுமன்றி இவர்களால் நடாத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூரக் கொலைகளும் வெளிவந்து மக்கள் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். சிலர் இவர்களை நபியவர்களால் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்யப்பட்ட அமைப்பாகப் பார்க்கின்றனர். மற்றும் சிலர் இஸ்லாத்தின் எதிரிகளால் வழிநடாத்தப்படும் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப்போக்குள்ள அமைப்பாகப் பார்க்கின்றனர்.
சிரிய அரசாங்கம் இஸ்ரேலை விட மிகக் கொடூரமான முறையில் சிரிய முஸ்லிம்களைக் கொன்று குவித்து வந்தது. அரபு வசந்தம் என்ற பெயரில் அரபு நாடுக ளில் புரட்சிகளைத் தூண்டிய துரோகிகளும் அமெரிக்கா போன்ற அயோக்கியர்களும் இந்தக் கொடூரங்களைக்கண்டும் காணாதவர்கள்போல் இருந்தனர். சிரி யாவின் கொடூரங்களுக்கு ரஷ்யா ஆதரவு வழங்கி வந்தது. இந்தச் சூழ்நிலையில் சிரி யாவின் கொடூரங்களுக்கு எதிராக அரபு இளைஞர்கள் போராட முன்வந்தனர். சிரியா இராணுவத்தில் இருந்த சிலரும் சிரியாவின் கொடூரத்தைச் சகிக்க முடியா மல் ‘ஜைஸூல் ஹூர்’ சுதந்திரப் படை என்ற பெயரில் சிரியா அரசுக்கு எதிராகப்போராட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் சிரியாவின் ஷிஆ அரசுக்கு எதிராக ‘ஜப்ஹதுன் னுஸ்ரா, அல்கைதா, ஜைஸூல் ஹூர்’ போன்ற போராளிக்குழுக்கள் போராடிக் கொண்டிருந்த சூழ்நிலையில் சிரியா அரசு படிப்படியாக ஆட்டம்கண்டு வந்த தருணத்தில்தான் ‘தாயிப்’ என்று அரபி யில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்றும் சுருக்கமாக அழைக்கப்படும் இந்தக்குழு பிரபலமா னது. அல்கைதாவில் இருந்து பிரிந்து சென்ற இந்தக் குழுவுடன் பல போரா ளிகள் இணைந்துகொண்டனர். இவர்கள் பல வெற்றிகளை ஈட்டினர். ஈற்றில் ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளை உள்ளடக்கி இஸ்லாமிய ஸ்டேட்டை நிறுவி பிரகடனத்தையும் செய்தனர். அல்லாஹ் வுக்காக அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற ஈமானிய உள்ளம் கொண்ட பலரும் இந்த அணியில் இருக்கலாம் என்பதில் ஐயமில்லை. ஆனால், இவர்கள் சரியான பாதையில் செல்கின்றார்களா என்றால், இல்லை என்பதே உண்மையாகும்.
இவர்களைக் கொடூரமானவர்களாகவும், காமுகர்களாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் தருணத்தில்தான் ஈராக்கில் பணி புரிந்த இந்தியாவைச் சேர்ந்த தாதிகள் சிலரையும் பத்திரமாகக் காப்பாற்றி இவர்கள் இந்தியாவுக்கு அனுப்பினர். வந்த தாதிகள் அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை போராளிகள். அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையிலும் எமக்கு உணவு தந்தனர். அவர்களின் விரல் நகங்கள் கூட எம்மீது படவில்லை எனக் கூறி அவர்களின் பண்பட்ட நிலையைக் கூறினர். முகத்தை மூடிக்கொண்டு யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு இவர்களின் தலையில் போட்டுவிடலாம். ஈராக்கைப் பொருத்தவரையில் இஸ்ரேலிய, அமெரிக்க உளவாளிகள் நிறைந்து வழியும் பூமி. அவர்கள் இது போன்ற குழப்பங்களைத் தூண்டி குழப்பத்தை உண்டுபண்ணி வருகின்றனர். இதேவேளை, இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் இனரைப் பொருத்தவரையில் தவறான கோணத்தில் யாரோ சில கிங்மேக்கரால் வழிநடாத்தப்படுகின்றனர். அது யாராக இருக்க முடியும் என்ற ஐயம் பரவலாக உள்ளது.
சிரியாவின் ஷிஆ ஆட்சியை ஒழிக்க உருவானவர்கள்தான் இவர்கள். ஆனால், இவர்கள் திட்டமிட்டுத் தவறாக வழிநடாத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தனிப்பட்ட சூழ்ச்சிகளால் இஸ்லாமியக் கலீபா தெரிவு செய்யப்படுவது இஸ்லா மிய வழிமுறையல்ல. இந்தக் கிலாபத் அறிவிப்பின் பின்னர் இவர்களுக்கு ஷிஆ அரசை ஒழிப்பதைவிட தமது கிலாபத் ஆட்சியைப் பாதுகாப்பதும், பரப்புவதுமே இலக்காக மாறிவிட்டது. இதன் மூலம் அவர்களது இலக்கு திசைமாறிவிட்டது. இதனால் சிரி யாவும் ஈரானுமே பயனடைந்துள்ளன.அடுத்து, இவர்களின் கிலாபத் அறிவிப்பை ஏற்காத ஏனைய போராளி அமைப்புக்களுடன் இவர்கள் இப்போது மோத ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் சிரியாவில் ஷிஆ எதிர்ப்புப் போராட்டம் இன்னும் பலவீனப்பட்டுள்ளது.
அடுத்து, இந்தக் குழுவினர் தாம் ஈராக்கைப் பிடித்துவிட்டு அடுத்து ஷிஆ அரசான ஈரானையும் பிடிப்போம் என்று கூறாமல் சவூதியைப் பிடிப்போம்;, ஜோர்தானைப் பிடிப்போம் என அறைகூவல் விட்டுள்ளனர். இதுவும் இவர்களை ஷிஆக்களே இயக்குகின்றனர் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது. அத்துடன் ஷிஆக் களை எதிர்க்களம் கண்டவர்கள் தவ றான கிலாபத் அறிவிப்பால் ஸூன்னத் வல் ஜமாஅத்தையே எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இவற்றைப் பார்க்கும் போது இந்த இயக்கத்தின் செயற்பாட்டால் ஈரானும் சிரியாவுமே அதிக இலாபம் அடைந்துள்ளனர். எனவே, இது ஷிஆக் களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு குழு என சில இஸ்லாமிய அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
அடுத்து, இன்றைய உலக நாடுகள் பலவும் தமக்கு எதிராகச் செயற்படும் சில தீவிரவாதக் குழுக்களைத் தாமே உருவாக்கி வழிநடாத்துகின்றது. இத்தகைய தீவிரவாதக் குழுக்கள் மூலம் தம்மை நியாயப்படுத்திக் கொள்ளவும் நீண்டகால நலன்களை நல்கக்கூடிய ஆயுதத் தாக்குதல்களை நடாத்துவதற்காகவும், அரசியல் அபிலா சைகளை அடைந்து கொள்வதற்காகவும் பயன்படுத்துகின்றன. செப்டம்பர் – 11 தாக்குதலைத் தானே நடத்திவிட்டு அல்கைதாவின் பெயரில் போட்டு ஆப்கான் மீதான போரை அமெரிக்கா தொடங்கியதை இதற்கு உதாரண மாகக் கூறலாம். அவர்களின் அரசியல் இலக்குகளை அடைய அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஐ.எஸ்.ஐ.எஸ் இற்குப் புகழை யும் அதேநேரம் நபிகளாரினால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட அமைப்பு என்ற எண்ணத்தையும் தேடிக் கொடுத்தது அதன் திடீர் வெற்றிகளே! இந்த வெற்றிகள் திட்டமிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களாகத் தென்படுகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ்இனர் ஈராக் வசமுள்ள பல பகுதிகளைக் கைப்பற்றுகின்றனர். இதன் மூலம் அதிகளவிலான ஆயுதங்களைப் பெறுகின்றனர். அந்த ஆயுதங்களைக் கண்காட்சியாக வைத்து உலகைத் தம்பக்கம் திரும்பிப்பார்க்க வைக்கின்றனர், பொதுவாக ஒரு ஆயுதப்படை தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியா மல் பின்வாங்குவதாக இருந்தால் எதிரியின் கைகளுக்கு ஆயுதம் கிடைக்கக்கூடாது என்பதற்காக ஆயுதக்கிடங்குகளை அழித்துவிட்டே செல்வார்கள். பின்வாங்கிய அமெரிக்கா, ஈரான் சார்பு ஈராக் படையினர் ஏன் ஆயுதங்களை அழிக்காமல் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப் பினருக்குத் தாரை வார்த்தனர்?
ஈராக்கின் வங்கிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் வசமாகி பல்லாயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் அவர்கள் வசமாயின! பின்வாங்கும் படையினர் ஏன் இந்த வங்கிகளை அழிக்கவில்லை? திட்டமிட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இனருக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கியதுபோல் இது அமையவில்லையா? ஈராக்கின் முக்கிய எண்ணெய் வயல்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. போரில் ஈடுபடுபவர்களுக்குத் தேவை யான பணத்தையும் எண்ணெயையும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த எண்ணெய் வயல்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளன என எண்ணத் தோன்றுகின்றது.
ஸதாம் ஹூஸைனிடம் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறியே ஈராக் மீது அநியாயமான போரை அமெரிக்கா நடாத்தியது. ஐ.நாவும் ஈராக்கின் ஸதா மின் உள்ளாடைகள் வரை இரசாயன ஆயுதத்தைத்தேடி அலைந்து வந்தது. அதன் பின்னர் பல ஆண்டுகள் அங்கே அமெரிக்காவின் ஆட்சிதான் நடக்கிறது. இவர்களால் கண்டு பிடிக்கப்படாத இரசாயன ஆயுதங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் இனரால் ஓரிரு மாதங்களுக்குள் கண்டு பிடித்து எடுக்கப்பட்டது என்றால் இது காதில் பூ சுற்றுவதாகத் தெரியவில்லையா?
பொதுவாக எதிர்ப்படை பலமா னதாக இருந்தாலும் அதன் பலத்தைக் குறைத்துக்காட்டவே எவரும் விரும்புவர். ஆனால், இதற்கு மாற்றமாக அமெரிக்க ஜனாதிபதியே இவர்கள் ஒரு பலமான படையாக வளர்ந்து வருகின்றனர். உண்மையில் ஒரு பிரச்சினைதான் என்று கூறி இவர்களை இஸ்லாமிய உலகின் ஹீரோக்களாகக் காட்ட முற்படுகின்றார் என்றால், காரணம் இல்லாமல் இருக்குமா? அமெரிக்க ஊடகங்கள் இவர்கள் கையில் பெருந்தொகைப் பணம் சிக்கியுள்ளதையும் அவர்களின் 800 பேரைக் கண்டு தமது படையில் உள்ள 30000 பேர் பயந்து ஓடியதையும் பகிரங்கமாகப் பேசி யதில் இருந்து இவர்களை ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக ஹீரோக்களாகக் காட்ட முற்படுகின்றனர் என்பதை யூகிக்கலாம்.
இவற்றை நோக்கும்போது ஈரான், சிரியா போன்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவும் ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக இவர்களை வலிமைப்படுத்துகின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் இனர் தமது போராளிகளுக்கு நல்ல சம்பளம் கொடுக்கின்றனர். உலக அளவில் உள்ள போராளிகளைத் தம்மோடு இணைந்து போராட அழைத்துள்ளனர். உலக மட்டத்தில் உள்ள போராளி முஸ்லிம்களை ஒரே இடத்தில் எடுத்து அவர்களை அழித்துவிட அமெரிக்கா திட்டம் தீட்டியிருக்கலாம். அல்லது, இவர்களை வளர்த்து இவர்கள் மூலமாக முழு முஸ்லிம் உலகிலும் குழப்பத்தை உண்டுபண்ணத் திட்டமிட்டிருக்கலாம். முஸ்லிம் உலகில் இவர்களுக்கு ஆதரவான பொதுமக்கள் உருவாகுவார்கள். அவர்கள் தமது அரசுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். இதன் மூலம் முஸ்லிம் உலகை ஒரு கொந்தளிப்பான நிலையில் வைத்திருக்கலாம் எனத் திட்டம் தீட்டியிருக்கலாம்.
இவர்களுக்கும் ஏனைய போராளிக் குழுக்களுக்கும் இடையில் மோதவிட்டு போராளிகளைப் போரா ளிகள் மூலமாகவே அழிக்கத் திட்டமிட்டிருக்கலாம். இவர்களின் நடவடிக்கைகள் மூலம் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த முயற்சிக்கலாம். இஸ்லாமிய ஆட்சியொன்று வந்தால் அங்கு இப்படித்தான் கொடூரமான கொலை கள் நடக்கும் எனக்காட்ட முற்படலாம். இப்படிப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இவர்கள் மூலம் ஒரு போதும் இஸ்லாம் பயன்பெறப்போவதில்லை என்பது மட்டும் உண்மை! இறுதிக் காலத்தில் கருப்புக் கொடியுடன் ஒரு கூட்டத்தினர் வருவார்கள் என்ற கருத்தில் பல பலவீனமான ஹதீஸ்கள் உள்ளன. இவர்கள் கருப்புக்கொடி ஏந்தியுள்ளதாலும், தமக்குப் பலமான வெற்றி கிடைத்து வருகின்றமையினாலும் நபியவர்களினால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட அந்த அமைப்பு தாமே என அவர்கள் நம்புகின்றனர்.
இதேவேளை உலகின் மிக பயங்கரமான தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் முதன் முதலாக இணைந்த இலங்கை தீவிரவாதி அபு ஷூரயா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 16 இலங்கை தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இன்னமும் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இலங்கை குருநா கல் கலேவெலவைச் சேர்ந்த அபு ஷூரயா, தன்னுடைய பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோ ருடன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் ஐக்கியமாகியிருக்கிறார். மேலும் இலங்கை நாட்டவரை மூளைச் சலவை செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி இலங்கையைச் சேர்ந்த 16 பேரையும் இந்த இயக்கத்தில் அபு ஷூரயா இணைத்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் திகதியன்று விமானத்தாக்குதல் ஒன்றில் அபு ஷூரயா கொல்லப்பட்டுவிட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு பத்திரிகையான தாபிக் தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் 16 இலங்கை நாட்டவர் இணைந்துள்ளபோதும் தங்கள் நாட்டுக்கு எந்த ஒரு தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை அரசினால் முஸ்லீம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக தாக்குதல் நடாத்த இந்த அமைப்பு திட்டமிட்டிருந்ததாகவும், காலத்தின் தேவை கருதி அரசியல் ரீதியாக மாற்றமொன்றை இங்கிருக்கக்கூடிய இவ்வமைப்பு சார்பானவர்கள் ஐளுஐளு தீவிரவாதிகளுக்கு அறிவித்தமையின் மூலமாக அத்தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. மீண்டுமொருமுறை பொதுபல சேனாவி னால் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் தோற்றுவிக்கப்படுமாயின் இலங்கையில் இருக்கக்கூடிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தாக்குவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனினும் இலங்கையில் இருக்கக்கூடிய இந்த தீவிரவாத அமைப்பினரை இனங்காண்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
கொழும்பு, கண்டி, புத்தளம், போன்ற இடங்களில் முஸ்லீம் மக்கள் செறிந்துவாழ்கின்றனர். இவர்களை இனங்காணும் நோக்கிலேயே தற்போது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் துரிதகதியில் செயற்பட்டு வருகின்றனர். இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தாக்குவதென்பது சாதாரணவிடயம். அவ்வாறு தாக்குதல் நடைபெற்றால் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவமாட்டாது என்பதுதான் உண்மை. காரணம் என்னவெனில் அவர்களுடைய நாடுகளிலும் இந்த தீவிரவாத அமைப்பின் தலையீடுகள் இருக்கின்றது. இஸ்லாமியர்களுக்கு எங்கெங்கெல்லாம் அநியாயங்கள் நடக்கின்றதோ அங்கெல்லாம் தாக்குதல் நடாத்த இந்த அமைப்பினர் திட்டம் வகுத்துள்ளனர். அதனடிப்படையில்தான் இலங்கையும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இனங்காணப்பட்டுள்ளது. இதிலிருந்து இலங்கையரசு மீண்டுவர மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சுழியோடி