12 அணிகள் இடையிலான உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி நெதர்லாந்தின் ஹாக் நகரில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது.
அர்ஜென்டினா வீரர் புருனெட் 31-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 5-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து 2 -வது வெற்றியை பதிவு செய்தது.