நோக்கியா மார்ப் தொழில்நுட்பம் பற்றி தெரியுமா? (வீடியோ இணைப்பு)

381
தற்காலத்தில் கைப்பேசி இல்லாதவர்களே இல்லை என கூறலாம்.அந்தளவு கைப்பேசியோடு மனிதர்களோடு பின்னிப்பிணைந்து உள்ளது.

கைப்பேசியை பொருத்தவரை தற்போது ஆண்ட்ராயிட் வகைகள் 81 சதவீத சந்தையை தன்னகத்தே கொண்டுள்ளது.

அடுத்ததாக விண்டோஸ் வகைகள் 12 சதவீத சந்தையை பெற்றுள்ளது. ஆனால் வரும் 2019 ஆண்டில் விண்டோஸ் மொபைல்களில் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கேற்றார் போல் நோக்கியா நிறுவனம் தனது மார்ப் தொழில்நுட்பம் தொடர்பாக ஆராய்ச்சியை மெருக்கேற்றி வருகிறது.

மார்ப் என்பது நானோ தொழில்நுட்பம் மூலம் செயல்படும் வாட்ச் வடிவ கைப்பேசியாகும். மார்ப் என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்கைப்பேசி தொடர்பான ஆராய்ச்சியில் நோக்கியா தற்போது முழுவீச்சில் இறங்கியுள்ளது.

மார்ப் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு வசதிகளை மொபைல் போன்களில் புகுத்தமுடியும். அதாவது நமது போனை நினைத்த வடிவத்துக்கு அமைத்துகொள்ளலாம்.

வேண்டுமென்றால் வாட்ச்சாக நமது கையில் கட்டியும் பயன்படுத்தலாம். அதேபோல் தூசுகள் இருந்தால் தானாகவே சுத்தம் செய்துகொள்ளும் வசதியும் இதில் உண்டு. சார்ஜ் செய்ய வேண்டும் என்ற கவலையும் இல்லை.

சூரிய ஒளியிலேயே சார்ச் செய்து கொள்ளும் வசதி இதில் உள்ளது. இதை அணிகலனாகவும் அணிந்துகொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

இதே போன்று பல்வேறு வசதிகளும் இந்த மார்ப் தொழில்நுட்பத்தின் மூலம் பெறலாம். தற்போது இந்த தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகள் வேகமான நடைபெற்று வருகின்றன.

இந்த அனைத்து வசதிகளும் கொண்ட மொபைல் நமது கைகளில் தவழவேண்டுமென்றால் சில ஆண்டுகள் காத்திருக்கதான் வேண்டும்.

SHARE