ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர் ஹோட்டலில் அட்டகாசம்

694

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் ஹோட்டல் ஒன்றில் அட்டகாசம் புரிந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வரும் படையாதிகாரி ஒருவரும் அவரது நண்பர்கள சிலரும் மாவத்தகம பிரதேசத்தில் அமைந்துள்ள கங்கா ஹோட்டலின் காசாளரை கடுமையாக தாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 4ம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடிபோதையில் குறித்த ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியோகத்தரும் அவரது நண்பர்களும் காசாளரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

42 வயதான சுமித் பிரியங்கர ஜயசேன என்பவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சுமித் மாவத்தகம வைத்தியசாலையிலிருந்து குருணால் வைத்தியசாலைக்கும் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் குருணாகல் வைத்தியசாலைக்கு மீள அனுப்பி வைக்கப்பட்ட சுமித்திற்கு கண் மற்றும் மூக்கில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய படையதிகாரியை அடையாளம் காண முடியும் என ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது ஹோட்டலின் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் ஏழரை பவுண் தங்கச் சங்கலியொன்று காணாமல் போனதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

SHARE