நீடித்து உழைக்கும் ஸ்மார்ட் கைப்பேசி மின்கல வடிவமைப்பில் சோனி

330

 

இலத்திரனியல் சாதனங்களுக்கு பெயர்பெற்ற சோனி நிறுவனம் தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான மின்கலங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.இவை சாதாரண மின்கலங்களை விடவும் 40 சதவீத மின்சக்தியை கூடுதலான நேரம் கைப்பேசிகளுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சல்பர் (கந்தகம்) எனும் மூலகத்தினை அடிப்படையாகக் கொண்டு இலிதியத்துடன் இணைத்து உருவாக்கப்படவுள்ள இந்த மின்கலம் 2020ம் ஆண்டு முதல் விற்பனைக்கு விடப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE