உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஈழன். இவர் இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணி அளவில், பாளையங்கோட்டை ஜவகர் திடலில் தனது ஆதரவாளர்களோடு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அவர்,
இந்திய வெளியுறவுத்துறையின் அமைச்சராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் நல்லுறவு கொண்டிருப்பதால் அவரை உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்றார்.