வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் தனது துல்லிய பந்துவீச்சால் எதிரணியை மிரட்டி வருகிறார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகப் போட்டியிலே 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய முஸ்தாபிஜூர், வங்கதேச அணி தொடரை வெல்லவும் காரணமாக இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் முடிந்த வங்கதேச பிரீமியர் லீக் போட்டியில் டாக்கா அணிக்காக விளையாடிய முஸ்தாபிஜூர் சிறப்பாக செயல்பட்டார்.
இதில் வெளியேற்றுதல் சுற்றில் பாரிசல் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்லுக்கு ’இன்-சுவிங்க்’ செய்து ஒரு பந்துவீசினார். இதில் திணறிய கெய்ல் 31 ஓட்டங்களில் பவுல்ட் ஆகி வெளியேறினார்.
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரா கூட முஸ்தாபிஜூர் தனது துல்லியதன்மை கொண்ட பந்துவீச்சால் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார். இவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக பாராட்டி இருந்தார்.