ஐநா மனித உரிமை கமிஷன் உயர் கமிஷனராக ஜோர்டான் இளவரசர் தேர்வு

513
ஐ.நா. மனித உரிமை சபையின் உயர் கமிஷனராக ஜோர்டான் நாட்டை சேர்ந்த இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹுசெய்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அந்த பதவியை வகித்து வரும் நவி பிள்ளையின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதையொட்டி, புதிய கமிஷனராக யாரை நியமிக்கலாம்? என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவின்படி, அந்த பதவிக்கு ஜோர்டான் இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹுசெய்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பான் கி மூன் அறிவித்துள்ளார்.

தற்போது, ஐ.நா. சபைக்கான ஜோர்டான் நிரந்தர பிரதிநிதியாக உள்ள இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹுசெய்ன்(50), ஜான் ஹாட்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர்.

SHARE