HTC நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்கைப்பேசியான HTC One X9 – ஐ சந்தையில் களமிறக்கியுள்ளது.5,5 இன்ச் தொடுதிரையுடன், 1920 x 1080 Pixel தீர்மானம் கொண்ட இந்த கைப்பேசி MediaTek X10 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
மைக்ரோ SD அட்டை வழியாக 32 GB வரை விரிவாகக்கூடிய, 3 GB Ram உள்ளடங்கிய சேமிப்புடன் உள்ளது. முன்புறமாக 4 Megapixel கமெரா வசதியும், பின்பறமாக 13 Megapixel வசதியும் கொண்டுள்ளது, 3000 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. தற்போது சீனாவில் 370 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த கைப்பேசி, பிற நாடுகளில் வெளியாவது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. |