ஆயுளை அதிகரிக்கும் ஜீன்கள் கண்டுபிடிப்பு

344
மனிதனின் ஆயுட்காலத்தை 100 வருடங்களை தாண்டியும் அதிகரிக்கக்கூடியது என நம்பப்படும் 4 வகையான ஜீன்களை (பரம்பரை அலகுகள்) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.தற்போது அதிகளவானவர்கள் 90 வயதினை அண்மித்த காலப்பகுதியிலேயே மரணமடைகின்றனர். எனவே இந்த ஜீன்களின் உதவியுடன் 100 வருடங்களை தாண்டியும் வாழ வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் இரத்தத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ABO எனும் ஜீன், கலங்களின் செயற்பாட்டினை ஒழுங்குபடுத்தும் CDKN2B எனும் ஜீன், பழ ஈய்க்களில் காணப்படும் SH2B3 வகை ஜீன் மற்றும் நிர்ப்பீடணத்துடன் தொடர்புடைய HLA எனும் ஜீன் ஆகியவற்றினை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும் மாற்றத்தின் ஊடாகவே இவ் ஆயுள் அதிகரிப்பு சாத்தியமாகும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE