விமான உற்பத்தியில் களமிறங்கியது ஹொண்டா

321
நான்கு சில்லு வாகன உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் சிறந்த சந்தைவாய்ப்பினை கொண்ட நிறுவமான ஹொண்டா விமான உற்பத்தியிலும் காலடி பதித்துள்ளது.இதன் அடிப்படையில் வியாபார நோக்கம் கொண்ட தனது முதலாவது பாரம் குறைந்த HondaJet எனும் விமானத்திற்கன பறப்பு சான்றிதழை கடந்த வாரம் பெற்றுள்ளது.

இவ் விமானம் 420 நொட்ஸ் வேகத்தில் பறப்பில் ஈடுபடக்கூடியதாக இருப்பதுடன், 42.62 அடிகள் நீளமானதாகவும், இறக்கைகளுக்கிடையில் 39.76 அடிகள் அகலம் உடையதாகவும், 14.90 அடிகள் உயரம் உடையதாகவும் காணப்படுகின்றது.

மேலம் தனது விமானங்களின் கட்டுமாணப் பணிகளை அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதுடன், தனது சந்தைப்படுத்தலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளவுள்ளது.

SHARE