பீகாரில் கார் மீது ரெயில் மோதி பதினோரு பேர் பலி

507
பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் கார் மீது ரெயில் மோதிய விபத்தில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட பதினோரு பேர் பலியானார்கள்.

சம்பரன் மாவட்டத்திற்குட்பட்ட பெட்டையா கிராமம் அருகேயுள்ள ராஜ்காட் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது சரக்கு ரெயில் மோதியதில் பதினோரு பேர் பலியானதுடன் மேலும் மூன்று பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கிய காரில் மணமகன் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ரெயில் மோதியதும் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் ஏழு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளனர். மணமகன் உள்ளிட்ட மூன்று பேர் உயிருக்கு போராடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

SHARE