காங்கோ நாட்டில் இனக்கலவரம்: 30 பேர் பலி

515
காங்கோ நாட்டின் கிழக்கு ஜனநாயக குடியரசில் நேற்று இரவு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

அங்குள்ள சர்ச் ஒன்றில் இவர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. புகாவு நகருக்கு தெற்கே உள்ள முட்ருலேவில் இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பபுலிரு இனத்தை சேர்ந்த இவர்கள் அனைவரும் அங்குள்ள சர்ச்சில் நடந்த மத போதனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அங்கேயே உறங்கிக்கொண்டிருந்த போது பாருண்டி இனத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் எட்டு ஆண்களும், 14 பெண்களும், 10 குழந்தைகள் மற்றும் ஒரு காவலரும் உயிரிழந்ததாக அப்பகுதியை சேர்ந்த குடியுருப்புவாசி ஒருவர் தெரிவித்தார். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு சேவை செய்து வரும் ஐ.நா. பணியாளர்கள் கூறுகையில், பபுலிரு இனத்தினருக்கும், பாருண்டி இனத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்ததாக தெரிவித்துள்ளனர். இரு இனத்தை சேர்ந்தவர்களுக்கிடையே நிலம் மற்றும் சுங்க வரி தொடர்பாக நீண்ட காலமாக மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

SHARE