பிரெஞ்ச் ஓபன்: மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் பட்டம் வென்றார் ஷரபோவா

544
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ரஷியாவை சேர்ந்த மரியா ஷரபோவாவும் ரொமேனியாவின் சிமொனா ஹாலெப்பும் மோதினர்.

முதல் செட்டில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினர். 57 நிமிடங்களுக்கு நீடித்த இந்த செட்டை ஷரபோவா சிறப்பாக விளையாடி 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் விளையாடினர். கிட்டத்தட்ட 72 நிமிடங்கள் நீடித்த 2வது செட்டில் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டதால் டை பிரேக்கரில் 5-7 என்ற கணக்கில் ஹாலெப் கைப்பற்றியதால் அந்த செட்டை 6-7 என்ற செட் கணக்கில் ஷரபோவா இழந்தார்.

பின்னர் மூன்றாவது செட்டில் மீண்டும் தனது திறமையை நிரூபித்த ஷரபோவா 53 நிமிடங்களில் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 5வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

SHARE