கூகுள், பேஸ்புக், யாகூ போன்ற நிறுவனங்கள் தமது பயனர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எச்சரிக்கைகள் செய்வது வழக்கம். இவற்றின் வரிசையில் மைக்ரோசொப்ட் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தற்போது இணையத்தளங்கள் மூலமாக பல்வேறு கண்காணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.இதனால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனுமதியின்றி கையாளப்படுவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதனை தவிர்த்து சிறந்த சேவையை வழங்குதற்காக ஏனைய நிறுவனங்களைப் போன்றே மைக்ரோசொப்ட் நிறுவனமும் தனது பயனர்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளது. |