அரிய மருத்துவ குணங்களை கொண்ட அவரைக்காய் எளிதில் ஜீரணமாகும் சக்தி கொண்டது. இதில் வைட்டமின்கள் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளன, பித்தத்தினால் உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற பாதிப்புகளுக்கு தீர்வாகிறது. சுமார் 100 கிராம் அவரை காயில் மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்பு சத்து, நார் சத்து, புரதசத்து உள்ளிட்டவை அடங்கி இருக்கிறது. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும். மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. மூளைக்கு, முதுகு தண்டுக்கு, இளம் தாய்மார்களுக்கு, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என அனைத்து வகையிலும் பயன்படுகிறது. நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், நச்சுக்களை நீக்கி புற்றுநோய் வராமல் தடுக்கிறது. |