புதிய மைல்கல்லை எட்டியது விண்டோஸ் 10

334
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் 10 இயங்குதளமானது தற்போது உலகெங்கிலும் சுமார் 200 மில்லியன் கருவிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் 75 மில்லியன் சாதனங்களில் விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறுகிய காலத்தில் மேலும் 125 மில்லியன் சாதனங்கள் வரை அதிகரித்து 200 மில்லியனை எட்டியுள்ளது.

விண்டோஸ் 7 இயங்குதளத்தினை விடவும் பிரபல்யமானதாகக் காணப்படும் விண்டோஸ் 10 இயங்குதளமானது லேப்டொப், டெக்ஸ்டாப், டேப்லட், ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் Xbox One என்பவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE