கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்தில், அப்பிளின் App Store விற்பனை முந்தைய ஆண்டுகளின் சாதனையை முறியடித்துள்ளது.அப்பிள் போன், ஐ பேட் போன்ற அப்பிள் சாதனங்களில் App Store என்ற விற்பனை தளம் செயல்படும்.
அவற்றில் பயனர் கணக்கு வைத்துக் கொண்டு அதில் இருந்து தேவையான கேம், பாடல்கள், ஆப் என அனைத்தையும் நாம் நமது அப்பிள் சாதனங்களுக்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்நிலையில், அப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அப்பிளின் App Store-ல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கால விற்பனை புதிய சாதனையை படைத்துள்ளது. எங்கள் பயனாளர்கள் தங்களுடைய ஐபோன், ஐபேட், மேக், அப்பிள் வாட்ச் மற்றும் அப்பிள் டி.வி என அனைத்துக்கும் தேவையான ஆப்-களை அதிகளவில் தரவிறக்கம் செய்து மகிழ்ந்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டு ஆப்-களுக்காக மட்டும் எங்கள் பயனாளிகள் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்துள்ளனர் என அப்பிளின் Worldwide Marketing-ன் மூத்த துணைத் தலைவர் Philip Schiller அறிவித்துள்ளார். மேலும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வகையில் புதுமையான ஆப்-களை செய்து கொடுக்கும் டெவலப்பர்களுக்கு எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார். இந்த விடுமுறை காலத்தில் App Store-ல் விளையாட்டு, சமூக வலையமைப்பு, பொழுதுபோக்கு போன்ற பிரபலமான ஆப்கள் பெரும்பாலானவர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. |