ஆவி, வண்டுகளை ஓன்லைனில் அனுப்பலாம் தெரியுமா?

378
இன்றைய நவீன உலகில் சாப்பிடுவதை மறந்துவிட்டு கூட, இணையதளங்களுக்கு அடிமையானவர்கள் ஏராளம்.அப்படி, இணையதளம் மூலம் சிலவகை பொருட்களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புவதற்காக புதுவித அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உதாராணத்திற்கு, நீங்கள் மதுவகைகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவிரும்பினால், Bareye Application – ஐ பயன்படுத்தி அவர்களுக்கு அனுப்பலாம்.

என்னென்ன பொருட்கள் அனுப்பலாம்?

தங்கம்:  bitcold.com என்ற கணக்கை ஆரம்பித்து அதில் தங்கங்களை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் தங்க விகிதத்தின் அளவு சிலநேரத்தில் பாதிக்கப்பட்டு வருவதால், நீங்கள் சேமித்து வைத்துள்ள தங்கத்தை அதில் உள்ள கிளிக் பட்டனை பயன்படுத்தி அனுப்பிக்கொள்ளலாம்.

கட்டியணைத்தல்: உங்கள் உறவினர்கள் தொலைதுரத்தில் இருப்பார்கள், அவர்களை கட்டியணைத்து உங்கள் அன்பினை பரிமாற நினைத்தீர்கள் என்றால், Hug apps – ஐ திறந்து, அதில் Select to contact – ஐ கிளிக் செய்து Send கொடுங்கள்.

பின்னர், உங்கள் ஸ்மார்ட்கைப்பேசியை உங்கள் மார்போடு அணைத்துகொள்ளுங்கள், நீங்கள் அனுப்பிய தகவல் அவர்களுக்கு சேரும்போது, அவர்களின் கைப்பேசி நீண்டநேரம் Vibrate ஆகும்.

ஆந்தை கழிவு: உயிரியல் படிக்கும் மாவணர்களுக்கு பயன்படும் இந்த ஆந்தை கழிவினையும் அனுப்பலாம்.

கிளிட்டர் பாம் (Glitter Bomb): 99.99 டொலர் செலவில் இந்த கிளிட்டர் பாமினை அனுப்பினால், கடிதம் போன்ற வடிவில் இருக்கும் இதனை திறந்தவுடன் உள்ளே இருந்த Glitter(மினுப்பான்கள்) சிதறும்.

மதுவகைகள்: ஸ்மார்ட்கைப்பேசியின் மூலம் BarEye app – ஐ பயன்படுத்தி மதுவகைகளை அனுப்பலாம்.

ஆவி: நியூசிலாந்தை சேர்ந்த ஏவி வுட்‌பெரீ (Avie Woodbury) என்ற பெண் இரண்டு ஆவிகளை ஒரு சிறு பாட்டிலில் பிடித்து, புனித நீர் கொண்டு அதை அடைத்து, ஆன்லைனில் 1300 டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

வண்டுகள்:செவ்வண்டுகளை வாங்கி, விவசாயிகள் மற்றும் வண்டுகளை வளர்ப்பவர்ளுக்கு இதனை நீங்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்யலாம், இதன் விலை 14,00 டொலர் ஆகும்.

SHARE