உலகின் நீர்முழ்கி கண்ணாடி உணவகம் சுறா மீன்களுக்கு நடுவே

548
உலகின் நீர்முழ்கி கண்ணாடி உணவகம் Conrad – Maldives- hotel என்ற பெயரில் five star resort ஒன்றினில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, இந்தியப் பெருங்கடலில் 5 மீற்றர் கடலின் ஆழத்தில் உருவாக்கப்பட்டுள்ள நீர்முழ்கி உணவகம் ஆகும்.இங்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவை வழங்கப்படுகின்றன. இங்கு வரும் வாடிக்கையாளர்களை சுற்றி, சுறாக்களும், பெரிய மீன்களும், அரிய வகை மீன்களும் நீந்தி கொண்டிருக்கும்.வாடிக்கையாளர்கள், அழகிய நீல நிறக் கடலை கண்டபடியே தங்களது உணவினை ரசித்து உண்ணும் வகையில் இந்த உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் ஒரு சொட்டு கடல் நீர் கூட இந்த உணவகத்துக்குள் நுழையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகம் உலகிலேயே மிகப்பெரிய அழகான உணவகம் என்ற விருதை new York daily news என்ற தினசரி பத்திரிகை வழங்கியுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 14 பேர் உட்கார்ந்து உணவு அருந்தலாம். ஒரு நபருக்கு 190 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஐரோப்பிய உணவு வகைகள் எல்லாமே இங்கு வழங்கப்படுகிறது. திருமணம் மற்றும் பிறந்த நாள் பார்ட்டிகளும் இந்த உணவகத்தில் புக் செய்யப்படுகின்றது.

 

SHARE