சர்வதேச விசாரணை, ஓர் ஆய்வு – சின்னத்துரை சிறிவாசு ஆவரங்கால் –

657

 

tna-arts

சர்வதேச விசாரணை,  ஓர் ஆய்வு

சின்னத்துரை சிறிவாசு ஆவரங்கால் – 6/09/205

சர்வதேச விசாரணை, தெரிந்து விமர்சியுங்கள்.

சர்வதேச விசாரணை, சர்வதேச கண்டுபிடிப்பு விசாரணை, சர்வதேச நீதிமன்ற விசாரணை, கலந்த விசாரணை, உள்ளக விசாரணை

இன்று சர்வதேச விசாரணை என்று சில குழப்பகரமான அரசியலை பலர் வேண்டுமென்றே செய்து, மக்களைக் குழப்புவதில் ஈடுபட்டுள்ளார்கள்.

குழப்பங்கள்

1/
ஐ.நா.ம.உ.ச யின் சர்வதேச கண்டுபிடிப்பு விசாரணை ஏற்கெனெவே விசாரித்து முடிந்துவிட்டது. இதற்கு இராஜபக்ச அரசாங்கம் ஒத்துளைக்கவில்லை, எனவே இது முற்றுமுழுதாக ஐநாவின் சர்வதேச விசாரணையாக மட்டுமே நடந்துமுடிந்துள்ளது.
குறிப்பு: இந்த ஐநாவின் விசாரணை மிக வலுவான சாட்சியங்கள் பதிவுசெய்துள்ளது. அதில் சந்திரநேரு வெள்ளைக்கொடி தொடர்பாக கொடுத்த சாட்சியமும் அடங்கும். இதில் மனவருந்ததக்கது என்னவென்றால், ஐநா கெஞ்சிக்கேட்டும் கஜேந்திரகுமார் வெள்ளைகொடி தொடர்பாக சாட்சியமளிக்க மறுத்து சாட்சியம் கொடுக்காமலே விட்டுவிட்டார். அவர் இந்தியா தன்னைக்கேட்டும் ஆட்சிமாற்றம் செய்ய உதவி செய்யமாட்டேன் என்று சொன்ன வருந்ததக்க நிகழ்ச்சிக்கு ஒப்பானது. நாடகமாக அவரும் சாட்சியங்கள் சேர்த்தார், அதன் விபரம் தெரியாது.

முடிவடந்த சர்வதேச விசாரணையின் அறிக்கை ஐநாவால் விரைவில் வெளியிடபடவிருக்கின்றது.

1அ)
சீனா தமிழ் இன அழிப்புச் செய்தது என்கின்ற கருத்து பரவலாக உள்ளது. இதற்குமாறாக சில தமிழர்கள் விரோதமாக தீர்ப்பாயம் எனும் கம்யூனிச சீனா சார் சர்வதேச விசாரணையை முடித்திருந்தார்கள். இதன் தீர்ப்பும் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இதில் தமிழ் இன அழிப்புச் செய்தது அமெரிக்காவும் பிரித்தானியாவும் என்று அபாண்ட பொய்யாக தீர்ப்பும் கொடுத்தாயிற்று. இதில் தமிழ் மக்கள் துயரப்படவேண்டிய  விடயம் என்னவென்றால் கஜேந்திரகுமார் இந்த தீர்பாயத்தின் தீர்ப்பை ஆமோதரித்து அறிக்கைகள் விடுவதுடன் இதன் அடிப்படையில் தனது அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளுகின்றார். இவருக்கு ஆதரவாக, சில புலத்து தமிழர்களும், விக்னேஸ்வரனும் செயல்படுகின்றார்கள். இவர்களுக்கு அமெரிக்கா எதிரி, தமிழர் விடுதலையை இந்த பகையை தீர்க்க பாவிக்கின்றனர்.

2/
ஐநா அறிக்கை வந்தவுடன் அதில் விசாரணையில் கண்டறியபட்டவைகளை எப்படியான பொறிமுறைகளால் தீர்ப்பது என்ற கேள்வி எழுகின்றது. இந்த அறிக்கையில் பல உப-பகுதிகளும் அடங்கும். உதாரணமாக பெண்கள் மீதான கொடுமை, நில அபகரிப்பு, கொலைகள், கடத்தல்கள், காணாமல் போனோர், இனப்படுகொலை சார்,  என்று பல உப-விடயங்கள் அடங்கும்.

யார் விசாரிப்பது

சர்வதேச நீதிமன்ற விசாரணை, சர்வதேச பங்களிப்புடன் உள்ளக நீதிமன்ற விசாரணை, வெறுமனே உள்ளக நீதிமன்ற விசாரணை என்று பலவிதமான பொறிமுறைகள் கருத்தில் கொள்ளப்படும்.
சர்வதேச நீதி விசாரணை நடாத்துவது மிகவும் கடினமான விடயம். அப்படி ஓர் விசாரனை நடாத்தவேண்டுமென்றால் ஐநா.ம.உ.ச மட்டுமல்ல வீட்டோ உரிமை கொண்ட ஐநா பாதுகாப்பு சபையும் இதற்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். அமெரிக்கா முன்பு ம.உ.சயில் செய்ததுபோல்  சீனா, ருஸ்யா போன்ற நாடுகளின் வீட்டோ உரிமையை எமக்கு சாதகமாக அழுத்தம்கொடுத்து மாற்றும் என்று எதிர்பார்க்கமுடியாது. அமெரிக்காவிற்கு இதைவிட இலகுவாக சர்வதேச மேற்பார்வையில் உள்ளக விசாரணை செய்து தீர்வுகளை தருவதே இலகுவான காரியம்.

எனவே கலந்த/ஹைப்பிறிட் எனும் சர்வதேச பங்குடன் சர்வதேச உள்ளக விசாரணை வருவதே மிகவும் சாத்தியமாக உள்ளது. இப்படியான இக்கட்டான நிலையில் சர்வதேச விசாரணையை கோரும் த.தே.கூ இந்த கலந்த உள்ளக விசாரணையை ஏற்பதா அல்லது அமெரிக்காவுடன் முரண்பட்டு அதையும் வேண்டாம் என்பதா என்று வரும்போது, த.தே.கூ கலந்த விசாரணையை ஏற்றுக்கொண்டு நடக்கவேண்டியவற்றை செய்யும் என்று எதிர்பார்க்கலாம். சீன சார்பு கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சுரேஸ்பிரேமச்சந்திரன் போன்றோர் அமெரிக்காவிற்கு எதிராக தீவிர போராட்டம்கள் நடாத்த முயற்சிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

2அ/
கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சில புலம்பெயர் பேர்வழிகள் சீனாவின் தீர்ப்பாயம் சொல்வதாலும், அத்துடன் நடிப்பிற்காக சர்வதேச விசாரணை என்று சொல்வதாலும், அமெரிக்கா பாரதூரமான இன்னோர் தீர்மானத்தை எடுக்கலாம். தமிழர்கள் எல்லோரும் சர்வதேச விசாரணை என்று கேட்கின்றார்கள் எனவே அப்படியே செய்வோம் என்று தீர்மானம் கொண்டுவரலாம். இதற்கு முக்கிய காரணிகள் நீண்ட ஒர் கால அவகாசத்தை இலங்கை அரசுக்கு கொடுத்து பிரச்சனைக்கு தீர்வுகாண முயற்சிக்கலாம் என்று சொல்லலாம்.

இதன் அடிப்படையில், முதலாவதாக ஐநா.ம.உ.ச யில் அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை தோர்கடிக்கபடலாம். இரண்டாவதாக பிராரணை வென்றாலும் செக்கூறிற்றி கௌன்சிலில் சீனாவும் ருஸ்யாவும் வீற்றோ பாவித்து பல வருடங்களுக்கு எதுவும் நடக்காது செய்விக்கலாம். இது தீர்ப்பாய தோழர்கள் அவாவுடன் எதிர்பார்ப்பது. கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சில புலம்பெயர்ந்தோர் இதனையே எதிர்பார்க்கின்றனர். அமெரிகாவிற்கும் காலதாமதத்தை கெட்ட பெயர்வேண்டாது ஏற்படுத்த வசதியாகின்றது.

எது எப்படியோ தமிழர்க்கோர் அரசியல் தீர்வு என்பதில் அமெரிக்கா உறுதையாக உள்ளது. எப்போ இது பூரணமாகும் என்பது கேள்விகுறியே. தமிழர்க்கு தீர்வு வரும்போது அமெரிக்கா சிங்கள மக்களும் அவர்களின் நண்பர்களாக இருப்பர் என்பதையும் உறுதிசெய்யும்.

இன்றய  எமது கடமை சிந்தித்து செயல்படுவதே

Question:

Thank you Sinnaththurai,

We know about this UN report and so on.We also know that it will take some time
to implement the report.You seem to have suggested Internal inquiry.I dont know whether you
have considered the safety of Tamil people or just considered the legal aspects.
What is important today for the Tamil people is survival,escape from getting killed,escape
from Genocide.I don’t know whether you have experience in Sinhalese politics,that is,
Sri Lanka politics.I don’t know whether you are aware of the number of investigations carried
out by SL Govt. on the killings of Tamil people from 1958 and how many were prosecuted
and how many were jailed and how many were sentenced to death.I don’t know whether
you know,not a single sinhalese was prosecuted  and found guilty.

Subramaniam Thiagarajah

Answer:

Dear Subramaniam Thiagarajah,

In an ideal situation I would call for international judicial mechanism.

However much we badly experienced in local responses of the past Sinhala governments, the present government is compelled to resolve the issue. This compulsion comes from international community, namely the human rights defending countries. We never had this support and hence comparing the past to the current activities mathematically do not count in full. The question is will we receive full support from the international community to achieve this. It is the duty of all of us to ask this question and take a serious decision as to what to do with this scenario. Because as you too agree the other one, the international mechanism might take years even to start the activities. This years may count to roughly 25 to 50 years, if we care to acess the tug-of-war that might come about in the security council. This is the normal behavior of international community. If there was no international military intervention, I think all such endeavors ended up in this sort of long duration.

On the other hand, we will only risk one or two years, and start the ball rolling immediately by agreeing to a hybrid mechanism. Within one year we can acess the situation and call for a international judicial mechanism. Even better, (spokes person hint) part of the issu is assigned to international judiciary and others are assigned to hybrid judiciary.

We never had winning as the prime target and never worked with that single minded aim. We should avoid rhetorics and seriously evaluate the situation with a single aim of winning the struggle at the earliest possible. Sinhalese will have immense advantage by delaying matters. They can full fill their task of colonization while our problem drags for years and years. If the colonization is completed than America nor even God will find it difficult to reverse. We do experience this already.

Now evaluate hybrid mechanism. It has a highest possibility of implementing the UN findings and highest possibility of a quick fix solution.

Nantry
Srivas

சர்வதேச பொறிமுறை ஏன் வேண்டும். TELO/PLOTE/EPRLF

tna-arts
பலகேள்விகளிக்கு சுமந்திரன் பதில்
இனப்படுகொலை – பாராளுமன்றம் உள்ளும் வெளியும் …
பாதிப்படைந்த தமிழ் மக்களுக்காக (80%) ந்நிதிமன்றில் வாதாடினேன்
கஜேந்திரகுமார் (போர்குற்ற!) இராணுவத்துக்காக மட்டும் வாதடி…
2009ல் கஜேந்திரகுமார் பசிலுடன் பேசியது என்ன?
வெள்ளைக்கொடி விவகாரம்
வெள்ளைக்கொடி பிடித்து வாங்கோ என்று சொன்னது இன்னொரு த.தே.கூ பா.உ. அதனை நடைமுறைப்படுத்த
அமெரிக்காவுடனும், இராஜபக்சாவுடனும் மௌனத்துக்கான ஆயத்தங்களை செய்தது இந்த இன்னொரு  த.தே.கூ பா.உ. அத்துடன் கோதாவும், பசிலும் இந்த பேச்சுவார்த்தையின் நகல்களை பெற்றுக்கொண்டிருந்தனர்.ஐதுபற்றி சில வெளிநாட்டு தமிழல்லா பிரமுகர்களும் இருந்தனர். அத்துடன் இந்த வெள்ளைக்கொடி பேச்சுமுன் பல நகர்வுகல் செய்யப்பட்டது.

கஜன் அவர்கள் அமெரிக்காவை, மேற்குலகை, இந்தியாவை எதிரிகளாக வர்ணிப்பவர். இவர் வெள்ளைக்கொடி தொடர்பாக எப்படி பிரயசித்தமாக பணிபுரிந்திருப்பார் என்று சிந்திக்கவேண்டும்.ஆவராட்களின் சீனாவுடன் இதுபற்றி பேசவில்லை.

கஜன் பிரயசித்தமாக வெறுமனே முயற்சித்தார் என்பது உண்மையாகலாம்
இங்கு எழுப்பப்பட்ட கேழ்விகளுக்கு பதில்தராமல்,  கேட்காத கேள்விக்கு இப்படி மோசமாக சத்தியம் செய்வது ப்தில்தருவது அவசியமற்ற ஓர் செயல்பாடு.  இந்த வெள்ளைக்கொடி விவகாரம் இலங்கையை ஐநாவரை இழுத்துச்சென்றது உங்களுக்கு புரிகின்றதா?

கேட்ட கேழ்வி என்ன?

அந்த மற்ற பா.உஆ ஆமாம்.

உங்களிடம் கேட்டது நீங்கள் ஐநாவிற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ போர்குற்ற விசாரணைக்கு உங்கள் சாட்சியம் கொடுத்துவிட்டீர்களா? நீங்கள் பசிலுடன் மட்டும் கதத்ததென்றாலும் அவை என்ன என்ற் சொல்வீர்களா என்பதுதான் கேள்வி. மற்றவர்களை கூட்டிக்கொண்டுபோய் சாட்சி சொல்லவைப்பதுபோல் நீங்களும் செய்தீர்களா என்பது மட்டுமே கேள்வி.  நீங்களும் பசிலுடன் பேசியதை ஐநாவிற்கு சொன்னீர்களா என்ற ஐயப்பாட்டில் எழுவதுதான் கேள்வி.
இங்கே கேள்வி என்னவென்றால் சர்வதேச விசாரணைக்கு நீங்கள் என்ன சொல்லியுள்ளீர்கள். நீங்கள் பசிலுடன் கதைத்தது தெரியும். நடந்ததுபற்றி ஐநா விசாரணைக்கு சொன்னீர்களா என்பதுதான் கேள்வி.

வெள்ளைக்கொடிக்கு உத்தரவாதம் கொடுத்தது அமெரிக்கா. அவர்கள் சாட்சியம் கேட்கின்றார்கள். நீங்கள் சீன அடிவருடிகளால் வழிநடாத்தப்படுவதால் சாட்சியம் அழித்தீர்களா என்பதுதான் இன்றயறஐயப்பாடான கேழ்வி, அல்லது ஒழிக்கின்றீர்களா என்பதுதான் கேள்வி.
என் இராஜபக்சா தலைவா வென்றுவா என்று ஆட்சிமாற்ற போரின்போது கூவிய நீங்கள், ஐநா வில் சாட்சியம் எதுவாக சொன்னீர்கள் என்பதுதான் இன்றய ஐயப்பாடு. போங்கடா இந்தியா நீங்கள் சொல்லி நான் ஆட்சிமாற்றம் செய்வதா என்று சொன்னநீங்கள் வேறு என்ன செய்கின்றீர்கள் என்பதுதான் ஐயப்பாடு. அதற்கு பதில் தாருங்கள். வழமைபோல் சுத்தி வழைத்து கேட்காத கேள்விக்கு பதில்தந்து, அதற்கு சத்தியமும் செய்வதேனோ.  உங்களுடன் கதைத்தோம் என்று யாராவது சொல்லியிருந்தால் இந்த சத்தியத்திற்கு பெறுமதியுண்டு.

இதன் அடிப்படையில், இப்படி யுரியூப்பில் தலவர் சம்பந்தன் ஏன் உமக்கு பதில்தரவில்லை என்ற கேள்வி எழுகின்றது உங்களுக்கு புரிகின்றதா? இன்று ஏன் ஐநாவில் விசாரணைகள் நடக்கின்றது, அதுவும் உங்கள் எஜமான்கள் விசாரணை மனுக்களை ஐநாவில் எரிக்கும்போதும் விசாரணை நடக்கின்றது என்பதாவதளேன் என்று புரிகின்றதா?

இதுதான் உங்கள் யுரியூப் உரை
https://youtu.be/L6xA_UHcTKA

tna-arts

செய்தி: கஜேந்திரகுமார் தன் இலக்கத்தை மாற்றி மறையப்பார்த்தார், ப நடேசன் அவர்கள் பிடித்துவிட்டார் என்று சொல்லப்படுகின்றது.http://www.jaffnajet.com/2015/08/3933

2009ம் ஆண்டு புலிகள் சரணடைந்தபோது கஜேந்திரகுமாரின் தொடர்புகள்! வெளிவராத தகவல்கள்

tna-arts

சமஸ்டி & ஓர்நாடு ஈர்தேசம்
சமஸ்டி & ஓர்நாடு ஈர்தேசம்

ஆய்வு: சின்னத்துரை சிறிவாசு ஆவரங்கால்

த.தே.கூ  சர்வதேசத்தின் ஆதரவையும் பலத்தயும் துணையாககொண்டு தீர்வாக சமஸ்டியை அடைவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் நகர்கின்றது. அஃது, சிங்கள பெரும்பான்மையை தீர்வுக்கு ஆதரவுதரவைக்கும் பலத்துடன் இருக்கின்றது இந்த த.தே.கூ. (யார் என்ன தேரத்லுக்குமுன் சொல்கின்றனர், தேர்தலுக்குப்பின் சொல்வார்கள், சொல்லவேண்டிய நிலைமை ஏற்படுத்தப்படும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்).

த.தே.ம.மு அமெரிக்க தீர்மானத்தை ஜெனீவாவில் வைத்து எரித்தும், ஜெனீவாவில் அமெரிக்கா நடாத்தும் தமிழர் சார்பான கூட்டங்களுள் புகுந்து தமிழர்க்கு எதிராக, அமெரிக்காவிற்கு எதிராக, மேற்குநாடுகளுக்கு எதிராக வாக்கு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள், அத்துடன் அமெரிக்கா த.தே.ம.மு யினரை தமது கூட்டங்களில் இருந்து வெளியே கலைத்தது. த,தே.ம.மு யினரின் அரசியல் ஆலோசகர்கள் அமெரிக்க விரோதிகள், அத்துடன் தமிழ் இன அழிப்புச் செய்த சீனாவின் ஆதரவாளர்கள்(!).இவர்கள் எமக்கு ஆதரவான சர்வதேச நாடுகளின் எதிரிகள். ஏற்கெனெவே சர்வதேசத்தால் கலைக்கப்பட்ட இவர்கள் தெரிவுசெய்யப்பட்டால் தமிழர்களே கைகழுவிவிடப்படும் நிலை ஏற்படும். இவர்களுக்கு இருதேசம் பெற்றுத்தரும் பலமோ, அறிவோ கிடையாது. மாறாக தமிழ்மக்கள் கைகழுவி விடப்பட்டு நிரந்தரத் தோல்வியை, குறிப்பாக சிங்களக் குடியேற்றத்தை பலத்துடன் எதிர்க்க வக்கில்லாமல் நிரந்தர தோல்வியை தமிழர்க்கு பெற்றுத்தருவார்கள் இந்த த.தே.ம.மு யினர். மௌனத்தை நிரந்தர தோல்வியாக்கும் ஈனர்கள் இவர்கள். த.தே.ம.மு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பயந்து ஓர்நாடு ஈர்டேஷ் என்று தம் கொள்கையையே மாற்றி மாற்று அரசியலுக்கு வந்துள்ளனர். ஆட்சிஆற்றத்தை உடைக்குக் மாற்றத்துக்கு வந்துள்ளார்கள். தேர்தலில் பங்குகொள்வதற்காக கொள்கையை மாற்றிவிட்டு மாற்று அரசியல் என்று பூச்சாண்டி காட்டுகின்றார்கள். முழுமையான சமஸ்டி தீர்வுக்கும், ஓர்நாடு ஈர்டேஷ் என்பதற்கும் ஏதோ அடிக்கணக்கில் வித்தியாசம் உள்ளதுபோல் நடித்து தாங்கள் கொள்கையைக் கைவிடவில்லை என்று நடிப்பதற்காக தீட்டிய திட்டம் இதுவே. ஓர் நாடு ஈர் தேசம் என்ற தத்துவம் சமஸ்டியின் ஓர் விளக்கமாக பல ஆண்டுகள்முன்பே பேசப்பட்ட விடயம். குறிப்பாக “ஒன் த நாஷொனோல் குஎஸ்ஷோன்” என்ற பாலா அண்ணனின் புத்தக வெளியீட்டுக்காலங்களில் ஓர் அம்சமாகப் பேசப்பட்டவை.

அன்புத் தமிழ் மக்களே, மேலே சொன்ன கருத்துக்களை தீர அறிந்தும், ஆய்ந்தும் நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை எடுத்தல்வேண்டும்.

சிந்திப்பதற்கு இலகுவாக உள்ளவை: சமஸ்டி/ஈர்தேசம் என்பதனை யார் வென்றுதருவார்கள் என்பதே. பாவம் பார்த்து வாக்களிக்காதீர்கள்மனுதாபப்பட்டு ஆதரவு தராதீர்கள். வீம்புக்கு ஆதரவு தராதீர்கள். ஆற அமர சிந்தித்து எம் இனத்துக்காக முடிவெடுங்கள்.

சின்னத்துரை சிறிவாசு, ஆவரங்கால்

Send your opinion relating to this article to: avarangal@gmail.com

குறிப்பு: நான் பல வருடங்களாக இரு மாநிலம் கொண்ட சமஸ்டி அமைபையும், அத்துடன் மத்திய அரசில் இரு மாநிலங்களுக்கும் 50:50 power கொண்ட தீர்வுக்காக முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன்.

குறிப்பு: சில சர்வதேசக் கருத்துக்களில் ஒவ்வோர் மாகாணத்தினதும் 2/3 ஆதரவைப்பெற்றே உருவாக்கிய அரசியல் சட்டங்களில் மாற்றம் கொண்டுவராலாம் என்றிருக்கவேண்டும் என்பதையும் சிலர் சொல்கின்றார்கள்.

tna-arts

ஆட்சிமாற்றம் (Jan 8 to Aug 17 2015)

ஆய்வு: சின்னத்துரை சிறிவாசு ஆவரங்கால்

தைமாதம் 2015 ற்கு முன்பதாக பல பரம இரகசிய, இரகசிய, சிறிது வெளிப்படையான அரசியல் நகர்வுகளை த.தே.கூ, பல சிங்கள புரிந்தோர் (மைத்திரி, சந்திரிகா, இரணில், இன்னும் பலர்), சர்வதேசம் போன்றவர்களுடன் இணைந்து நடாத்தினர். குறிப்பாக த.தே.கூ சார்பில் அதன் வெளிவிவகார விற்பன்னரான சுமந்திரன், தலைவர் இரா சம்பந்தனின் வழிகாட்டலில் ஆட்சிமாற்றத்தை த.தே.கூ சார்பில் வெற்றிகரமாக செய்திருந்தார். சர்வதேசம் இலங்கையில் நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள தேர்ந்தெடுக்கும் முதன்மையான முறை ஆட்சிமாற்றம், அதைத் தொடர்ந்து தீவுக்கான நகர்வுகள்.

இந்த ஆட்சிமாற்றத்தை சர்வதேசம் ஓர் தீர்வை தருவதற்கான முதன்மைப் பாதையாகக் கேட்டது. ஆட்சிமாற்றம் நடந்திராவிட்டால் தமிழ் இன அழிப்பு செய்த சீனாவினதும் அவர்கள்சார் பல நாடுகளினதும் பலத்த எதிர்புக்கள் மத்தியில் ஐநாவிலே தீர்வுக்கான நகர்வுகளை மனிதவுரிமைகாக்கும் நாடுகள் முன்னெடுத்துத்தான் இருக்கும்.

கரடுமுரடான ஐநா பாதையை சர்வதேசம் இரண்டாவது பாதையாக வைத்துள்ளது. ஐநாவின் கட்டுப்பாட்டில், ஆட்சியைமாற்றி தீர்வை முன்னெடுப்பது முதன்மைப் பாதையாக உள்ளது. இந்தப் பாதைகளை தெரிவுசெய்வது சர்வதேசம். இதில் சர்வதேசம் தலையிட்டுள்ளது, ஐநாவூடாக அரசுக்குள் தலையிடுகின்றது. இது சர்வதேச விவகாரம்.

தமிழர் சர்வதேசத்துடன் ஒத்துளைத்து முழுமையானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வை பெறவேண்டும். சர்வதேசத்துடன் இணங்கி அவர்களின் துணையுடன் அரசியல் தீர்வைபெற த.தே.கூ நகர்வுகளை வெற்றிகரமாக நகர்த்துகின்றது. சுமந்திரன் இதற்கான நகர்வுகளை செய்துகொண்டிருக்கின்றார்.
மாறாக மாற்று அரசியல் என்று ஆட்சிமாற்றத்தை திரும்பவும் தோற்கடித்து, சர்வதேச தீர்மானங்களை எரித்து, சர்வதேசத்துடன் இணங்காது முரண்பட்டு, நாமாகவே போரிட்டு, எம் பெண்களை திரும்பவும் பங்கப்பட விட்டு அதை காரணமாக காட்டியும் இதுபோன்ற விடயங்களைக்காட்டியும், சர்வதேசத்துடன் முரண்பட்டு எமது விடுதலையைப் பெறுவோம் என்று கூறுகின்றது த.தே.ம.மு. இந்த அபத்தமான மாற்று அரசியல்பற்றி மக்கள் தீர்க்கமாக சிந்திக்கவேண்டும்.

எதுவும் நடக்கவில்லையாம்
ஆட்சிமாற்றம் செய்யும்போது ஆட்சிமாறுவது மட்டுமே முக்கியம், மற்றவை பிறகு, மற்றவை பற்றி பாராளுமன்ற தேர்தலின்பின் பலமான நடவடிக்கைகள் எடுக்கப்படும், அதுவரை பெரிதாக எதுவும் திட்மாக இருக்கவில்லை. ஆட்சிமாற்றத்தின் பின் பெரிதாக ஏதும் எதிர்பார்க்காவிட்டாலும் பலவகையான சிறு விடுவிப்புகள் நடந்துள்ளன.

பிரசாரம் செய்யவேண்டும், மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காக ஆட்சிமாற்ற 100 நாட்களில் எதுவும் நடைபெறவில்லை எனும் ஏமாற்று வாதத்தை இந்த மாற்று வாதிகளான த.தே.ம.மு யினர் ஆட்சிமாற்றத்தை திரும்பவும் தோற்கடிக்கும் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்காக செய்கின்றனர். சர்வதேசத்துடன் முரண்டுகொண்டு செய்கின்றனர். எதுவும் நடக்கவில்லை எனும் திருகுதாழ பொய் வாதத்தை இவர்கள் செய்கின்றார்கள்.

எம் பெண்கள் திரும்பவும் மானபங்கபட்டால் மட்டும், வெள்ளைவான்கள் கடதினால் மட்டும், காணிகள் பறிபோனால் மட்டும், மிக அதிகளவில் குடியேற்றங்கள் நடந்தால் மட்டும் தங்களால் விடுதலைப் போராட்டம் நடாத்த முடியும் என்கின்றார்கள் இந்த த.தே.ம.மு யினரும் அவர்களின் மறைமுக சீன எஜமானர்களும்.

மக்களே சிந்தியுங்கள். ஆட்சிமாற்றம் ஓர் படியே. சர்வதேசத்தின் படி இது. ஏமாற்று மாற்றுவாதிகளை ஏற்காதீர்கள். இவர்கள் தமிழர்களை நிரந்தரமாக தோற்கவைத்துவிடுவர். ஆளமாக ஆற அமர இருந்து சிந்தித்து செயல்படுங்கள்.

சின்னத்துரை சிறிவாசு ஆவரங்கால்

குறிப்பு: பாராளுமன்ற தேர்த்லின்பின்பாக தமிழர் பாரிய அரசியல் தீர்வை பெறுவர் என்று தலைவர் இரா சம்பந்தன் கூறியுள்ளார்
மாறாக மாற்று அரசியல்வாதிகள் சர்வதேசத்துடனும் இணங்காது போராடி வெல்லப்போவதாக சொல்கின்றார்கள் தொடர்ந்தும் எரிப்பார்களாம்! 

tna-arts
சர்வதேச விசாரணை:

ஆய்வு: சின்னத்துரை சிறிவாசு ஆவரங்கால்

த.தே.கூ இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் பாரிய மனிதவுரிமை மீறல்களுக்கு ஓர் சர்வதேச விசாரணையை கோருகின்றது.

எமக்கு இடம்பெறும் இந்த கொடூரங்களை ஐநா மற்றும் சர்வதேச நாடுகள் உதவி கொண்டு  விசாரணைகள் செய்து நிறைவேற்றுவோம் என்பதுவே த.தே.கூ இன் நிலைப்பாடு. இதில் வெற்றிகொள்ளவேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது. இப்படி நாம் முயற்சிக்கும்போது சர்வதேசம் இப்போதைக்கு சர்வதேச விசாரணை செய்ய முடியாது என்று சொல்லி சர்வதேசத்துடன் இணைந்த உள்ளக விசாரணைகளை மட்டும்தான் தற்போதைக்கு செய்வோம் என்று சொல்லும்போது, த,தே.கூ அப்படியான விசாரணைகளை சர்வதேசவிசாரணையின் ஆரம்பமாக எடுத்து சர்வதேசத்துக்கு விரோதமாக செயல்படாது என்பதையும் ஊதியாக கஊகின்றோம்.

மாறாக அமெரிக்க தீர்மானத்தை எரித்து சர்வதேச விசாரணை கொன்டுவருவோம் எனும் த.தே.ம.மு யினர் சிறுபிள்ளை சண்டித்தனத்தில் அரசியல் செய்கின்றார்கள். மக்களே உங்களுக்கு தெரியும் சர்வதேசத்தை எதிர்த்து அப்படி இவர்களால் சர்வதேச விசாரனையை நடைமுறைபடுத்த முடியாது என்று. எனவே இவர்களின் வெற்றுக் கோசங்களை நம்பி தமிழர்களின் தோல்விக்கு பாதை சமைக்காதீர்கள். இவர்களால் என்றுமே முடியாது இந்த சர்வதேச விசாரனையை நடைமுறைப்படுத்த.

மாறாக மக்கள் அவதானித்து த.தே.கூ மட்டும்தன் படிப்படியாக சர்வதேச விசாரனைவரைக்கும் சென்று வெற்றியீட்டும் என்பதை உணர்கின்றீர்கள் என்பதை நம்புகின்றேன்.

சர்வதேச விசாரணையை நாங்கள் கேட்கின்றோம் என்று அவர்களுக்கு தெரியும் – சுமந்திரன் – யுரியூப்

tna-arts
சிங்கக்கொடி விவகாரம்

ஆய்வு: சின்னத்துரை சிறிவாசு ஆவரங்கால்

சிங்கக்கொடி விவகாரமும் த.தே.ம.மு எனும் தீவிர தோல்வி வாதிகளும்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 2012 மே தினப் பேரணியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைத் தேசியக் கொடியான சிங்கக்கொடி ஏந்திய விவகாரம். நடந்தது என்ன?.

2009 ன் மௌனத்திற்கு பின்பான உடனடியான காலங்களில், சிங்கள இராணுவம் மிகவும் கொடூரமான அடக்குமுறை ஆட்சியை வடக்கிலும் கிழக்கிலும் செய்துகொண்டிருந்தார்கள். (2015 ஆட்சிமாற்றம் வரை கொடூரங்கள் அதிகம்.)

சிங்கக்கொடி என்பது பௌத்த சிங்கள மக்களை பிரதிபலிக்கும் ஓர் சின்னம். அதற்கும் மேலாக சிங்கம் வாழ் காட்டுவது வடகிழக்கு தமிழ் மக்களை நோக்கி, இலங்கை சிருபான்மையினரை நோக்கி, தமிழ் நாட்டை நோக்கி, இதற்கும் மேலாக இந்தியாவை நோக்கி என்பது யாவரும் அறிந்ததே.

2012 ல் தொடர்ந்துகொண்டிருந்த இராணுவத்தின் அடக்குமுறைகளையும் அட்டூளியங்களையும் முறியடிப்பதற்காக, பலகட்சிகளின் கூட்டாக கூட்டப்பட்டதே யாழ்ப்பாண 2012 மேதின விழா.

இந்த 2012 யாழ் மேதின விழாவில் ரணில் விக்கிரமசிங்க, விகிரமபாகு கருணரட்னா, மனோகணேசன் போன்ற பல தெற்கின் தலைவர்களும் சுமார் 10,000 தெற்கிலிருந்து இதற்கென்றே வருகைதந்த சிங்கள மக்களும் கலந்துகொண்டனர். தமிழர்களின் சாத்வீகமுறையில் போராடும் உரிமைகளை நிலைநாட்டவென, அடக்குமுறை இராணுவத்துடன்  போராட யாழ் வருகை தந்தவர்களே இந்த 10,000ற்கு மேற்பட்ட சிங்கள மக்கள். இதில் மிக அதிகமானவர்கள் ஐ.தே.க சார்ந்த சிங்களவர்கள். சில நூறு தமிழர்கள் மட்டும் துணிவுடன் இந்த யாழ் மேதின விழாவில் கலந்துகொண்ட காலம் அது.

கூட்ட மேடையில் ரணில் விகிரமசிங்க, தனது குணாம்சங்களை கொண்டு, சிங்கக் கொடியினை, திடீரென, தமிழர்களின் தலைவர் இரா சம்ப்நதனின் கைகளில் திணித்து உயர்திப் பிடித்தார்.

தமிழர்களின் தலைவர் இந்த சிங்கக் கொடியினை தூக்கி எறிவதா இல்லையா என்று கணப்பொழுதில் முடிவெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, 10,000 ற்கும் மேலான சிங்கள மக்கள் தமிழர்களின் போராடும் உரிமையை இராணுவத்திடம் இருந்து பெற்றுதரும் போராடடத்திற்கென யாழ்பாணம் வந்துள்ளார்கள். கொடியை உதறி எறிந்தால் எமக்காக போராட வந்திருக்கும் 10,000 மேலான சிங்களவர்களை அவமதித்ததாகும். கொடியை எறிவதில்லை என்று முடிவெடுத்தேன் என்றார் இரா சம்பந்தர்.

மறுநாள் அறிக்கையில் இந்த சம்பவத்தை மறந்து விடுங்கள் என்று தமிழ் மக்களின் தலைவர் இரா சம்பந்தன் அறிக்கை விட்டார. அதன் உட்கருத்து தவறு நடந்துவிட்டது இதனை மறந்துவிடுங்கள் என்பதாகு. தானைத் தலைவர் சேனாதிராஜா தவறு நடந்துவிட்டது என்று அறிக்கை விட்டார்.

எனவே த.தே.ம.மு எனும் தீவிர தோல்வி வாதிகள் திரித்து பரப்பும் பொய்யான செய்திகளை நம்பாதீர்கள்.

#############Q&A-41

அந்த 10,000 எங்கே என்று நிட்சயமாக பதில் தரலாம்.

கஜேந்திரகுமார் வென்றுவா தலைவா என்று இராஜபக்சாவிற்கு தொலைபேசியில் வாழ்த்து அனுப்பும்போது, சுமந்திரனுடன் சேர்ந்து ஆட்சியை மாற்றியவர்களில் இந்த 10,000 முக்கியமானவர்கள்.

றோட்டில் இறங்கி போராடியும், அட்சிமாற்று என்று இந்தியா கேட்க போங்கடா போங்க என்று சர்வதேசத்தின் விரோதியாகவும், ஐநாவில் அமெரிக்கா தீர்மானம் தர அதனை எரித்த சீன அடிவருடிகளின் ஆலோசனையில் இயங்கி தீவிர குழப்பவாதிகளாக 50/100 வருடங்களில் எங்கள் உரிமையை பெற்றுத்தருவோம் என்று அடம்பிடிக்கும் த.தே.ம.மு யின் அட்டகாசத்தின் மத்தியில்,  நாளை தீர்வுவரும், சமஸ்டி வரும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நகர்வுகள் நடப்பதற்கு சர்வதேசம் மட்டுமல்ல, இந்த 10,000 மும் மற்றவர்களும் காரணம்.

Srivas

tna-arts
Ian Paisley Jr சைகிள் விவகாரம்

ஆய்வு: சின்னத்துரை சிறிவாசு ஆவரங்கால்

இஅன் பேய்ஸ்லி யூனியரிடம்  சைகிள் மட்டும் கேட்டார் என்று திரித்து மக்களை ஏமாற்றும் விவகாரம்.

குறிப்பாக த.தே.ம.மு யின் மணிவண்ணனின் அப்பட்டமான திரித்த பொய்களுக்கான பதில்கள்.

பின்னணி:

பேய்ஸ்லி குடும்பத்தினர், வட அயர்லாந்தில் இனவாதம் செய்யும் ஆட்சியாளர்கள். இராஜபக்ச போன்றவர்கள். மாற்று அயர்லாந்து சிறுபான்மையினரை அடக்கி ஆழ்ந்தவர்கள். அத்துடன் அங்கே புலம் பெயர்ந்த தமிழ் அமைபுகள் செய்யும் போராட்டதுக்கு கூடியவரை பிரித்தானிய பாராளுமன்றிலேயே எதிர்ப்பு நடவடிக்கை செய்பவர்கள். இராஜபக்சாவின் அற்ப கொடுப்புகளுக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இலங்கையில் பல வேண்டதகாத விடயங்களில் ஈடுபட்டவர் இவர்.

நடந்தது:

இரா சம்பந்தனை சந்திக்க இராஜபக்ச அரசால் திணிக்கப்பட்ட சந்திப்பும் இது.

இரா சம்பந்தன் பல வெளிநாட்டினரை சந்தித்துகொண்டிருக்கும்போது இவர் தாமதமாக திடீரென வந்து அந்த கலந்துடையாடலில் புகுந்து தன்னை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்துகொண்டிருந்த சம்பாசணையில் பேய்ஸ்லி கேட்டது சைகிள் தொடர்பான சம்பாசணையை.

இதனை திட்டமிட்டு வேண்டுமென்றே சைகிள்மட்டும் கேட்டார் என்று இந்த தமிழர் விரோதி, இராஜபக்சாவின் வருடி, பிரித்தானிய பாராளுமன்றில் பொய்யுரைத்தார். இலங்கையில் தமிழர்க்கு பிரச்சனையில்லை எனும் இராஜபக்சாவின் அறிவிப்பை செய்தார். இதுதொடர்பாக எல்லா பிரித்தானிய தமிழர் புலம்பெயர் அமைப்புகளும் வன்மையாக கண்டித்திருந்தனர். சம்பந்தன் தனக்கேயுரிய பாணியில் எதுவிருந்தாலும் பிரித்தானியாவுடன் இராஜதந்துர உறவுகளில் உராய்வு ஏற்படாது தகுந்த பதில்களை தந்திருந்தார். அந்த கஜேந்திரகுமார்கூட அனேகமாக நெளித்த்-பொய்யுடன் நிற்பவர், ஆனால் இந்த த.தே.ம.மு மணிவண்ணனோ தமிழ்மக்களை ஏமாற்ற பச்சை பொய்யாகவே எழிவாய் மலர்பவர். அத்துடன் புலம்பெயர் அமைப்புகளால் வெறுக்கப்படும் சில இணய தழங்களும் இந்த த.தே.ம.மு வின் பொய்களை ஊதுகின்றார்கள்

tna-arts
அவதூறு கஜேந்திரகுமார் & இராஜபக்ச தேநீர் விவகாரம்
http://www.tamilwin.com/show-RUmtyISUSVlozC.html
நாடாளுமன்ற கூட்டத் தொடர்களின்போது தேனீர் இடைவேளைகளில் நாங்கள் ஒரு மூலையிலிருக்கும் போது மகிந்த எங்களைகத் தேடிவந்து உரையாடினார்,

அதைப்படமாக்கிய சிலர் தற்போது நாங்கள் மகிந்த அரசுடன் இணைந்து செயற்பட்டதாக விசமப்பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

பஷில் – கஜேந்திரகுமார் உடன்படிக்கை என்ன?

சனல் 4 கலம் மக்றே பற்றி TNPF சொல்லும் பொய்கள்

கலம் மக்ரே சொல்லாததை சொல்லும் தீவிர குழப்ப வாதிகள்

தீர்மானத்தை எரித்தும் ஆட்சிமாற்றம் செய்ய விடமாட்டோம் என்றும் கூக்குரலிட்டும் சர்வதேசத்துடன் முரண்படும் த.தே.ம.மு தீவிர குழப்பவாதிகளாக செயல்பட்டு பரப்பும் பொய்கள்

சிசி
tna-arts

(சுமந்திரனின் பதில்)

சனல் 4 இன் கெலும் மெக்ரே மூலம் கசிந்ததாக கூறி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளக பொறிமுறை விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், அதற்கு நாம் உடன்பட்டுள்ளதாகவும் வதந்திகளை பரப்புகின்றார்கள். அது குறித்து நாம் விசாரித்த பொழுது, ஐக்கியநாடுகள் சபையில் இருந்து உத்தியோகபூர்வமாக எமக்கு தகவல் தரப்பட்டது. குறித்த ஆவணம் நிவ்யோர்க்கிலே இருக்கின்ற ஐ.நா பொருளாதார அபிவிருத்திக்கான அங்கத்திலே இருந்து, இலங்கையில் பொருளாதார அபிவிருத்திக்காக, இலங்கையில் சமாதானத்தை கட்டி எழுப்புவது தொடர்பில் அவர்கள் வரைந்த வரைபு ஒன்றே அது. அதற்கும், ஜெனிவாவிலே இருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் சர்வதேச விசாரணைக்கான தீர்மானத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.

நிவ்யோர்க்கிலே இருக்கும் ஐ.நா பொருளாதார மன்றத்திகும், ஜெனிவாவிலே செயல்படும் மனித உரிமைகள் பேரவைக்கும் இடையிலான வித்தியாசம் தமிழ் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டு தேர்தல் காலத்தில் கதைகளை சொல்லித் திரிகின்றார்கள். சனல் 4 ஆவணப்படத்தை தயாரித்த கெலும் மெக்ரே கூட தனது டுவீட்டர் பக்கத்தில், குறித்த ஆவணம் நிவ்யோர்க்கில் இருந்துதான் வந்தது, ஜெனிவா மனித உரிமை பேரவையிலே இருந்து வந்ததல்ல என்பதை சொல்லி இருக்கின்றார், ஆனால் இவர்கள், அதற்கு கை, கால், கண், மூக்கு எல்லாம் வைத்து உலவ விட்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் ஒரு பத்திரிகையாளார் மாநாட்டில் என்னிடம் கேட்கப்பட்ட பொழுது இதே பதிலையே வழங்கினேன், எனது பதிலில் நான் சொன்ன விடயத்தை கலம் மெக்ரே கூட உறுதிப் படுத்தி இருக்கின்றார். இந்த விடயம் இத்துடன் முடிந்தது என்று பார்த்தால், நேற்றைய தினம் அடுத்த பொய்யை பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். கலம் மெக்ரே தயாரித்த சனல் 4 ஆவணப் படத்தை சுமந்திரன் பொய்யானது என்று சொல்லிவிட்டார் என்று ஒரு புரளியைக் கிளப்பி, இப்பொழுது அதற்கு என்னிடத்திலே வியாக்கியானம் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். இந்தப் பொய்யுரைகள் மக்களிடத்திலே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே பரப்பப் படுகின்றன.

Ref

tna-arts
சர்வதேச விசாரணையை நாங்கள் கேட்கின்றோம் என்று அவர்களுக்கு தெரியும் – சுமந்திரன் – யுரியூப்

tna-arts
யாழ்ப்பாணம் வருகைதந்த டேவிட் கமறோனை திட்டிதீர்க்கும் கஜேந்திரகுமார்

Vikram Sashthri

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் அவர்கள் யாழ் வந்து சர்வதேச விசாரணை என்று சொல்ல, அவரை திட்டித்தீர்க்கும் சீன அடிவருடிகளின் வழிநடத்தலில் இயங்கும் த.தே.ம.மு, கேழுங்கள், பாருங்கள் வீடியோவை.
கஜேந்திரகுமாரின் சர்வதேச அரசியல் அறிவும் மற்றும் இராஜதந்திர ஆளுமையும் இவ்வளவுதான் – பாகம் இரண்டு

அன்பர்களே,

 

இலங்கையின் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் பிற நாட்டுத் தலைவர் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் ஆவார்.

அவர் இங்கு வந்து நடந்த, நடக்கின்ற சர்வதேச சட்ட மீறல்கள், போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இடம் பேர்ந்தோரின் அவலம் போன்றவற்றையெல்லாம் பார்த்து, கேட்டறிந்து அவற்றை சர்வதேச ஊடகங்கள் மூலமாக முழு உலகிற்கும் எடுத்துறைத்தார்.

அவருடைய அந்த சொந்த அனுபவத்தின் அடிப்படையில் அவரது அரசாங்கம் ஐநா மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் சர்வதேச சுயாதீன விசாரனை என்ற பதத்தை சேர்த்ததோடு அத்தீர்மானத்திற்கு பல வாக்குரிமை கொண்ட நாடுகளின் ஆதரவையும் பெற்றுத்தந்தது.

 வீடியோ-கஜேந்திரா

இப்படியாக எம்மவரின் நன்மைக்காக குரல் கொடுத்த பிரித்தானிய பிரதம மந்திரியின் விஜயம் பற்றி அந்நேரத்தில் கஜேந்திரகுமாரின் கருத்தையும் விமர்சனத்தையும் பாருங்கள்.

தக்க தருணங்களில் இப்படியான குதர்க்க கரமான பேச்சுக்களை நடாத்தி எமக்கு ஆதரவாய் வரும் சந்தர்ப்பங்களையெல்லாம் நழுவ விட்ட, விடுபவர் தான் இந்த கஜேந்திரகுமாரும் அவரது கட்சியும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

இப்படிப்பட்டவர்களா எமது மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரப்போகிரார்கள்?

யாருக்காவது தெரியுமா த.ம.தே.மு. யின் அரசியல் வேலைத்திட்டம்தான் என்னவென்று?

tna-arts
ஐநாவில் அமெரிக்காவை திட்டித்தீர்க்கும் கஜேந்திரகுமார்

ஐநா மனிதவுரிமைச் சபையில் தமிழர்க்கு தீர்வுகாண பிரேரணை வைத்த அமெரிக்காவை திட்டித்தீர்க்கும் சீன அடிவருடிகளின கையாட்களான, த.தே.ம.மு.  பாருங்கள் வீடியோவை.

——–

கஜேந்திரகுமாரின் பொய்கள் அம்பலம் – பாகம் ஒன்று

Vikram Sashthri

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களையும், சர்வதேச சட்ட மீறல்களையும் விசாரிக்கவேண்டுமென்றும், இலங்கையில் அதிகார பரவலாக்கத்தின் மூலம் அரசியல்பிரச்சினைக்கு தீர்வு  காணப்பட வேண்டுமென்றும், 2013ம் ஆண்டும், தொடர்ந்து 2014ம்ஆண்டு, சர்வதேச சுயாதீன விசாரணை கோறி அமெக்காவால் ஐநா மனித உரிமைஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்ட பிறேறணைகளை, கஜேந்திரகுமாரும் அவரது தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் ஆதரித்த லட்சணத்தைப் பாருங்கள்.

வீடியோ-கஜேந்திரகுமார்

தக்க தருணங்களில் இப்படியான குதர்க கரமான பேச்சுக்களை நடாத்தியது மட்டுமல்லபிறேறணையை எரித்தவர்களையெல்லாம் பாராட்டி பேசிவிட்டு இப்பொழுதோ தாங்கள்தான் அப்பிறேறணைகள் வரக் காரண கர்த்தாக்கள் என்ற பாணியில் பொய்ப் பிரச்சாரம்செய்கிரார்கள்!

tna-arts
சர்வதேச விசாரணை – யார் என்ன சொல்கின்றார்கள்

சின்னத்துரை சிறிவாசு ஆவரங்கால்
30-ஔகஸ்ற் 2015

இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணை நின்று போனமை எங்களுக்கு தீர்வுதேடும் அமெரிக்காவினது முடிபு. த.தே.கூ சர்வதேசவிசாரணை கேட்கின்றது. அறிவுகெட்டு த.தே.கூ மீது அபாண்டபொய்கூறி, அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை திட்டமிட்டு பொய்பிரசாரம் செய்து மறைக்கும் இந்த தமிழ் விரோதிகள் சீனாவின் அடிவருடிகளா? எமது போராட்டம் மௌனமாவதற்கு இருந்த முக்கிய காரணிகளில் ஒன்று சீனாவின் தமிழ் இன அழிப்பு. இந்த தமிழ் விரோதிகள் பொய்பேசியே தம் சுருட்டல்களை தக்கவைக்கவும் செய்கின்றார்கள்.

த.தே.கூ என்ன சொல்கின்றது.

1/ த.தே.கூ சர்வதேச விசாரணை கோருகின்றது, அதற்கு வேண்டிய அழுத்தங்களை கொடுக்கின்றது.

2/ இல்லை தீர்வுக்கு சிறந்தமுறைமை தற்போதைக்கு சர்வதேசத்துடன் இணைந்த உள்ளக விசாரணை என்று அமெரிக்கா சொன்னால், அதற்காக சர்வதேசத்துடன் முரண்பட்டு அவர்களுக்கு எதிராக போரிடமாட்டோம். ஆனால் காலத்தை கனியவைப்போம். கவனஈர்ப்பு போராட்டங்கள் செய்யப்படும்,  ஆனால் அமெரிக்காவுடனும், இந்தியாவுடனும், சர்வதேசத்துடனும் முரண்டுபிடிக்கும் முரடர்களாகமாட்டோம். தீர்க்கமாக சிந்தித்து வெண்டியதை செயல்படுத்தும் திறமை த.தே.கூ மற்றும் தலைவர் இரா சம்பந்தனுக்கும் உண்டு. அரசியல் தீர்வு முதலிலும் சர்வதேச விசாரணை தாமதித்தும் அமெரிக்கா செய்யவிருந்தால் அதனை எதிர்த்து போராடமாட்டோம் ஆனால் கவனஈர்ப்பு போராட்டம் செய்வோம்.

இவற்றை புரியாதோரும், த.தே.கூ எதிரிகளும் பொய்பிரசாரத்தில் மக்களை ஏமாற்றுகின்றார்கள். உண்மைகளை பேசுகின்றார்கள் இல்லை.

அண்மையில் நடந்த த.தே.கூ சிறுகட்சிகளின் கூட்டத்திலும் இதுவே முடிவு. சுரேஷ் பிறேமச்சந்திரன் மட்டும் அமெரிக்கா சர்வதேச விசாரணை கொண்டுவராது இருந்தால், அதனை த.தே.கூ அனுசரித்துப்போனால் தான் வெளியேறப்போவதான நிலைமை. மற்றும்படி எல்லோரும் சர்வதேச விசாரணை கேட்கின்றோம், அமெரிக்கா மாற்றுவழியில் தீர்வுகாண நின்றால் அதனை முறியடிக்க (த.தே.ம.மு போல்) த.தே.கூ முயலமாட்டார்கள், மாறாக இதனைத்தொடர்ந்து அடுத்தபடியாகவேனும் சர்வதேச விசாரணைவர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

tna-arts

 

SHARE