இன்றைய நடைமுறை அரசியல் வரலாறு கண்மூடித்தனமாக பேசிவிட்டு, தங்கள் கணனிக்கு முன் இருந்து தமிழ்மக்களுடையே,பிளவை ஏற்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருவது மிகவும் வருந்தத்தக்கது.

425

 

 

புலத்திலும், தாயகத்திலுமிருந்து காற்றோடு கண்மூடித்தனமாக பேசிவிட்டு, தங்கள் கணனிக்கு முன் இருந்து தமிழ்மக்களுடையே,பிளவை ஏற்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருவது மிகவும் வருந்தத்தக்கது.

RS-TNA-CVW1

எனவே எமது எதிர்கால அரசியலை நமது அறிவையும், பொறுமையையும் பயன் படுத்துவோம்!

நாம் எதிர்காலத்தில் எப்படியான அரசியல் நகர்வைச் செய்ய வேண்டும் என்று எனது பார்வை,என் அறிவுக்கு எட்டியவரை இதையே நமது சமூகம் கவனிக்க வேண்டும்.

தமிழர்களின் அரசியலும் சர்வதேச நகர்வுகளும்,
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த காலகட்டத்திலிருந்து, இலங்கை மீது விழுந்திருக்கும் சர்வதேசப் பார்வையை ஆராய்வதோடு,

உள்நாட்டு அரசியல் களநிலவரங்களையும் ஆராய்ந்தே எதிர்கால அரசியலை புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் உணரவேண்டும்.இல்லை எனில் இன்னும் பல ஆண்டுகளுக்கு பல அமைப்புக்கள் தடை செய்து பட்டியலிடப்படும்,

நாம் இப்போது சூழ்நிலை சார்ந்த அரசியலையே முன் கொண்டு செல்லவேண்டும் இல்லையேல் குரங்கு அப்பம் பகிர்ந்த கதையாகிவிடும்.

இருக்கின்ற அரசியல்கட்சிகள் செய்வதைவிட புதிது புதிதாக அரசியல் கட்சிகள் முளைப்பது நமது தலையில் நாமே மண்ணை வாரி வைப்பது போலாகும்,

அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த பொழுது பாணந்துறை mp சொன்னார்.

அமிர்தலிங்கத்தின் தோலை உரித்து செருப்புத் தைப்பேன் என்று அதேபோல் இப்போது சம்பந்தர் எதிர்க் கட்சித் தலைவராக இருப்பது தமிழர்களுக்கு ஒரு சாதகமான காலம் என்றே சொல்லவேண்டும்,

எந்த ஒரு வெளிநாடும் இலங்கைக்கு வரும் பொழுது ஒன்றில் அரசையும் எதிர்க் கட்சித் தலைவரையுமே சந்திப்பார்கள் அதுவே அவர்களது அரசின் குறிப்பேடுகளில் பதிவு செய்யப்படும் வேறு எதுவும் எந்த ஒரு அரசாலும் பதிவு செய்யப்படாது.

என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்,அடுத்து இலங்கை இலங்கை அரசு மிகவும் நிதானமான இராஜ தந்திரத்தைக் கையாள்கிறது என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

அதில்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமயில் ஒரு அணி சர்வதேச பொருளாதாரத்தையும் அரசுக்கு ஆதரவையும் தேடி பயணிக்கின்றது.

அடுத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் ஒரு அணி வெளிநாடுகளின் கொள்கை களையும் இலங்கை அரசுக்கு ஆதரவையும் தேடித் பயணிக்கின்றன.

அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அணி ஐக்கிய நாடுகள் சபை இலங்கைமீது பரிந்துரைக்கப் பட்ட வற்றுக்கு விமோசனம் தேடும் நிலையில் ஜனாதிபதியே கொள்ளப் போன தமிழரின் தண்டனையில் இருந்து அவரை விடுவித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளார்,

இதில் கடந்த மகிந்த அரசின் ஆட்சியில் இதுவரை சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் ஊழல் குற்றச் சாட்டில் சிக்கி உள்ளனர் அவர்களுக்கான விசாரனைப் பொறியில் பாரிய ஊழல் மற்றும் மோசடிப் போலீசார் வேறு திசையில் விசாரணை ஆரம்பிக்கின்றனர்.

மகிந்த குடும்பம் சார்ந்த 4 உறுப்பினர்கள் 42.650 கோடி ஊழல் புரிந்துள்ளதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றில் குற்றம் சாடி உள்ளார்.

இப்படி தமிழர் எதிர்ப்பு அணியினர் சிக்கலில் இருக்கும் பொது நாமும் பல கோணங்களில் நமது முன்னெடுப்பைச் செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து,

வெளிநாடுகளின் இன்றைய நிலை,
இந்தியா, அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளினதும் கொள்கைகள் மாறியிருக்கிற காலகட்டத்தில்,

அவற்றை நன்றாகப் பயன்படுத்தி, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கித் தரவேண்டியது அரசியற் தலைவர்களினது கடமையாகும்.

அதற்குத் தகுதியான, சர்வதேச நாடுகளிடையே சிறந்த உறவைப் பேணக்கூடிய உறுப்பினர்களை, பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யவேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது.

அமெரிக்கா போலே Soft power இலிருந்து Smart Power எனும் கொள்கையை அடையவேண்டும். அதனை அடைவதற்கு ஒற்றுமையும் உழைப்பும் அவசியம்.

சர்வதேச அரசியல் பற்றிய அறிவினைச் சாதாரண மக்களும் பெற்றிருக்கவேண்டும்.அதற்கான காரணம், உள்நாட்டில் நிலவுகிற இனப்பிரச்சனை.

இதில் தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் அனுசரணை, வழிகாட்டுதலின் கீழ் இயங்கிவருகிறது.

இந்தமுறையும், தமக்குத் தேவையான பேரம்பேசும் ஆற்றலை வழங்கும்படி கேட்கிறார்கள். சர்வதேச அரசியலைப் பொறுத்தவரை, எல்லாவிதமான விடயங்களையும் ஆராய்ந்துதான் தீர்மானம் எடுப்பார்கள்.

அதற்கான சூழ்நிலை அமைந்துவராவிட்டால், அவற்றை அமைத்துக்கொள்ளுவார்கள். அப்படிச் சாதகமான சூழ்நிலை நிலவும் காலகட்டத்தில், தங்களது பேரம்பேசும் அரசியல் மிகவும் முக்கியமானதாக அமையும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாதம்.

ஆனால், வாக்குபலம் மட்டுமே பேரம்பேசும் சக்திக்கு போதுமானதாக அமையாது. சிறந்த பேச்சாளர்களும் உறுதியான கட்டமைப்பும் அவசியம். தமிழ் மக்களையும் போராட்டங்களில் ஈடுபடுத்தக்கூடிய ஆற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

2009 முதல் 2015 வரையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு2009ம் ஆண்டு, விடுதலைப்புலிகள் தங்களது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பிறகு , 2010 ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.

இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவுடன் 14 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. அதன்பிறகு, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் மஹிந்த அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.

அரசினது ஆர்வமற்ற மனப்பான்மையால் பேச்சுவார்த்தையானது தோல்வியுற்றபின், சர்வதேச நாடுகளிடமிருந்து இலங்கை அரசுக்கு அதிகப்படியான அழுத்தங்கள் வந்தது.

அதோடு, அமெரிக்காவும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணையைக் கொண்டுவந்து, அதில் வெற்றியும் கண்டது.

மஹிந்த ராஜபக்ஷவின் பலம்பொருந்திய, சர்வாதிகார உள்நாட்டு ஆட்சியில் அனைவரும் குரல் கொடுக்கத் தயங்கியபோதுதான் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

மஹிந்தவின் அரசானது சர்வதேசத்தின் அழுத்தங்கள் எதற்கும் அடிபணியாது நின்றது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் இயங்கமுடியாத சூழ்நிலை நிலவியது.

தனது ஆட்சி அதிகாரத்தைப் பறிப்பதற்குத் திட்டம் தீட்டப்படுகிறதென்பதை அறிந்த மஹிந்த அரசானது தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னராகவே அடுத்த தேர்தலுக்குச் சென்றது.

அதன்பிறகு, 2015 ஜனவரியில் மஹிந்தவின் ஆட்சி அதிகாரமானது எதிர்பாராத விதமாகப் பறிக்கப்பட்டது. அது Silent revolution/Rainbow revolution என்று சிலரால் அழைக்கப்பட்டது.

இந்த மாற்றத்தின் பின்னணியில் இந்தியாவின் செயற்பாடு வலுவாக இருந்ததாக தென்னிலங்கையில் விமர்சனங்கள் எழுந்தது.

இலங்கையின் அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் மஹிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ, இந்தியப் புலனாய்வுத் தலைவரின் செயற்பாடு குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

மஹிந்தவைத் தோற்கடிக்கவென மைத்திரி தலைமையில் தென்னிலங்கையில் ஒன்றுசேர்ந்த கூட்டமைப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்துகொண்டது.

சர்வதேசத்தினதும் இந்தியாவினதும் ஆலோசனை இன்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த முடிவினை எடுத்திருக்காது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
இந்தியாவில் காங்கிரஸ் அரசு வெளியேற்றப்பட்டபின் பா.ஜ.கா அரசானது ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. முன்னைய அரசு போல அல்லாது, பா,ஜ.கா அரசின் வெளியுறவுக் கொள்கைகள் உறுதியானது என்பதே சில ஆய்வாளர்கள் கருத்து.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட அஜித் டோவால் மிகவும் உறுதியானவர். சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்துபோவதைக் கடுமையாக எச்சரித்தார்.

இந்தியாவுக்கு மட்டுமல்லாது சர்வதேசத்துக்கும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டிய அவசியம் இருக்கிறது.

2015 ஜனவரித் தேர்தல் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளின் நிலைப்பாடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எதிர்த்துப் புதிதாக நிறையக் கட்சிகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. எதிர்ப்பு அரசியல் செய்வது அந்தக் கட்சிகளின் கொள்கையாகும்.

சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நகர்வுகளைத் தொடர்ந்து எதிர்ப்பவர்கள். இதே எதிர்ப்பைத் தான் சிங்களக் கடும்போக்கு கட்சிகளும் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவானது,

இலங்கைக்கு எதிராக ஐநாவில் பிரேரணையைச் சமர்ப்பித்தது. இதைச் சிங்களக் கடும்போக்காளர்களுடன் சேர்ந்து இவர்களும் எதிர்த்தார்கள்.

இதில் எந்தவிதமான இன்டலெக்சுவல்த்தனத்தையும் காணமுடியவில்லை. ஆனால், தான் கொண்டுவந்த பிரேரணையை எப்படியாவது நிறைவேற்றி விடவேண்டுமென்பது அமெரிக்காவினது எண்ணமாகவிருந்தது.

. உலகின் தலைசிறந்த பேரம்பேசக்கூடிய பேச்சாளர்களைக் கொண்டிருக்கிற அமெரிக்காவானது, பெரும்பானைமையான நாடுகளின் ஆதரவைப் எப்படியோ பெற்றுக்கொண்டது.

இதில் சுமந்திரனின் பங்கும் இருந்தது. அப்போதைய காலகட்டத்தில் மஹிந்த அரசின் நெருங்கிய நண்பராக இயங்கிவந்த அவுஸ்திரிலேயாவுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்.

பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு அவுஸ்திரேலியாவானது மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. கொஞ்சம் கடுமையாகவிருந்த பிரேரணையை நிறைவேற்றவதற்கு போதியளவு ஆதரவு இல்லாமல் இருந்தபோது, அதில் சில திருத்தங்களை அமெரிக்கா மேற்கொண்டது.

அப்படி நிறைவேற்றப்பட்ட பிரேரணைதான் இன்றும் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியாக இருந்துவருகிறது.

அதன்பிறகு, முழுச் சமூகமும் இணைந்து மகிந்தவினை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற முற்பட்டவேளை, தமிழ்ச் சமூகத்தினை வாக்கினைப் புறக்கணிக்கும்படி சில கட்சிகள் கேட்டுக்கொண்டன.

இறுதியில் சிறுபான்மை வாக்குகளே புதிய அரசின் சக்தியையும் தீர்மானிக்க உதவியாக இருந்தன.

2015க்குப் பின்னரான தென்னிலங்கை நிலவரம்
சிறுபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரியின் அரசானது தமிழ்ப் பிரதேசங்களில் இருந்த இராணுவக் கெடுபிடிகளை அகற்றியதோடு,

குறிப்பிட்ட அளவு காணிகளையும் மக்களிடம் கையளித்தது. புதிய அரசின் இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் மஹிந்தவின் கூட்டம் தங்களுக்கு ஆதரவான இனவாத வாக்குகளாக மாற்றப் பார்த்தன.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்தல், கடும்போக்கான கருத்துகளைத் பொதுவெளியில் தெரிவித்தல் போன்ற செயற்பாடுகள் நிகழ்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தால்,

அது தென்னிலங்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். “சர்வதேசமும் மைத்திரி-ரணில் அரசும் சேர்ந்து நாட்டைப் பிரிக்கப்போகிறார்கள்” என்கிற மஹிந்தவின் பிரச்சாரத்துக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமையும்.

தென்னிலங்கை மக்களின் ஆதரவுடன், தமிழர்களின் பிரச்சனைய ஆராயத் தயாராகவிருக்கிற ஒரு புதிய அரசு பாராளுமன்றம் வரவேண்டிய அவசியமிருக்கிறது.

தென்னிலங்கையையும் சமாளித்துக்கொண்டு தமிழர் பிரச்சனையையும் தீர்த்து வைக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலை நிலவுகிறது.

பேரம்பேசும் அரசியல் – சிறந்த Negotiators அவசியம்
“பேரம்பேசுதல் நிகழும்போது இருதரப்பும் வெற்றிபெறவேண்டும். சிறந்த முறையில் பேரம் பேசக்கூடிய சக்திகளையும் நபர்களையும் கொண்டே தற்போதைய உலக அரசியல் இயங்கிவருகிறது.

அணு ஆயுத ஒப்பந்தங்கள் முதல் உள்ளூர்க் கைத்தொழில் ஒப்பந்தம் வரைக்கும் எத்தனையோ விடயங்களை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள்.

அமெரிக்காகூட ‘hard power’ எனும் கொள்கையிலிருந்து ‘smart power’ எனும் கொள்கைக்கு நகர்ந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்திலிருந்து நிறையப் பேச்சாளர்கள்,

இன்டெலெக்சுவல்ஸ்,சமூக அமைப்புகள் உருவாகவேண்டிய காலகட்டம் இது.ரணில் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குப் பின்னரான அரசியல்

ரணிலின் தலைமையிலான கூட்டணிக் கட்சி வெற்றி பெற்று ரணில் பிரதமரானதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்.

அதில் தங்கள் பேரம்பேசும் பலத்தைக் காட்டவேண்டிய கட்டாயம் தமிழ்த் தலைமைகளுக்கு இருக்கிறது. உள்நாட்டிலேயே பேசிக்கொண்டிருக்காமல் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் சரியான உறவைப் பேணவேண்டும்.
இத்தகைய அரசியல் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கிற அதேசமயம் வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியினையும் கவனத்திற்கொள்ளவேண்டும்.

தமிழர் அரசியலும் சர்வதேசமும் 2..
ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுச் சில மாதங்கள்ளே ஆகிறது.

இந்நிலையில், இலங்கையின் முக்கிய பிரச்சனையான இனப்பிரச்சினை தொடர்பில் அரசிடமிருந்து எவ்வாறான பதில்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது என்பதனை ஆராய்வது அவசியமாகும்.

சாதகமான ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருக்கிற வேளையில் இனப்பிரச்சனை தொடர்பில் சர்வதேசம் என்ன அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது எனத் தெரிந்துவைத்திருப்பதும் அவசியம்.

இனப்பிரச்சனையும் உள்நாட்டு அரசியலும்
ஜனவரி 17ல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தபின்னரும்கூட உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தது.

இதன் காரணமாக, இனப்பிரச்சனை தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளையோ, கருத்துகளையோ யாரும் முன்வைக்கவில்லை. எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஒருவித புரிந்துணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டது.

வெளிப்படையான பேச்சுகளை முன்னெடுத்திருந்தால், அவை தென்னிலங்கையில் மிகப்பெரும் அரசியற் பிரச்சாரமாக உருவெடுத்திருக்கும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைகூட மார்ச்சில் வெளியாகவிருந்த மனித உரிமை அறிக்கையை செப்டம்பருக்கு ஒத்திவைத்தது.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைந்த புதிய அரசுக்கு ஆதரவு வழங்குவதே சர்வதேசத்தின் எண்ணமாகவும் இருந்தது. இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்வரை இனப்பிரச்சனை தொடர்பில் அனைவரும் அடக்கிவாசித்தார்கள்.

அப்படியிருந்துமே எதிரணியினால் இனவாதப் பிரச்சாரம் தூண்டப்பட்டது. அதனை முக்கிய பிரச்சாரமாகக் கொண்டிருந்த மஹிந்த அணி மீண்டும் தோல்விகண்டது.

புதிய அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்
ஜனவரி 8ல் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர்களும் உதவியிருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்தும் புதிய அரசுடன் ஒருவித தொடர்பைப் பேணிவந்தது. இரண்டாவதாக, பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தாலும் புதிய அரசுக்கான தனது ஆதரவினை விலக்கிக்கொள்ளவில்லை.

ஓகஸ்ட் 17 தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறாதபோதும்கூட, ரணிலின் தலைமையிலான கட்சிக்குத் தனது ஆதரவினை வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்தது. தற்போதும்கூட ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில்தான் புதிய அரசோடு செயற்பட்டு வருகிறது.

அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒருவித சுமுகமான உறவைப் பேணிவருகிறது.

தேசிய அரசாங்கமும் இனப்பிரச்சனைத் தீர்வும்பாராளுமன்றத் தேர்தலிலே எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறாதபடியினால் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துக்கொண்டன.

ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமே இணைந்து ஆட்சியமைத்திருக்க முடியும்.

ஆனாலும் தேசிய அரசாங்கம் அமைப்பதன் மூலம் நாட்டின் பிரதான பிரச்சனைகளைத் தீர்ப்பது இலகு என்பதே சில அரசியல் வல்லுனர்களுடைய கருத்து. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தேசிய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கும்.

ஆகையால், நாட்டின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தீர்மானங்களைக் கொண்டுவரும்போது இடையூறுகள் இல்லாமல் நிறைவேற்றலாம்.

புதிய அரசின் மீட்சியின் பின்னரான நடவடிக்கைகள்
ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதும் ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டி மிகவும் முக்கியமானது.

அதில் தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், நிச்சயமாக 13ம் திருத்ததிற்கு அப்பால் சென்று தீர்வு எட்டப்படும் என்றும் கூறியிருந்தார்.

இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பில் ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா முக்கியமான பொறுப்பினை ஏற்றிருப்பதாகக் கூறினார்.

சில நாட்களிலேயே, சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதுடன், வவுனியாப் பூந்தோட்டம் முகாமில் வசிக்கும் மக்களுக்குக் குடியிருப்புப் பிரதேசங்களை அமைத்துக்கொடுக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றது.

இனப்பிரச்சனை தொடர்பிலான சர்வதேச அணுகுமுறை
இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்பதில் இந்தியா, அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உறுதியாக இருக்கின்றன.

ஆசியாவில் சமாதானத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் கட்டியெழுப்பவேண்டிய அவசியம் சர்வதேச நாடுகளுக்கு இருக்கிறது.

இதனடிப்படையில் இனப்பிரச்சனை தொடர்பான தீர்வுத் திட்டத்துக்கு சர்வதேச நாடுகள் மத்தியஸ்தம் வகிக்கின்றன. உள்நாட்டில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்ப்பதின் மூலம்தான் நாட்டினை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்ல முடியும் என்பதில் தெளிவாகக் இருக்கிறார்கள்.

அமெரிக்காவானது தற்போது இந்தியாவுடன் நெருங்கிய உறவினைப் பேணிவருகிறது. தனது கொள்கைகளில் பாரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது.

ஆசியக் கண்டத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல், நிலையற்ற தன்மை இருப்பதால் இன்னொரு வல்லரசுடன் இணைந்து செயற்படவேண்டிய நிலை அமெரிக்காவுக்கு இருக்கிறது.

ரஷ்யாவும் சீனாவும் இணைந்து ‘Multipolar world order’ எனும் சித்தாந்தத்தை நோக்கிப் பயணிப்பதால், இந்தியாவுடன் சேர்ந்து ஏனைய ஆசிய நாடுகளையும் பொருளாதாரத்தில் கட்டியெழுப்புவதன் மூலம் ஆசிய நாடுகளுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புகிறது.

இது அமெரிக்காவினுடைய நீண்டகாலத் திட்டம் என்கிறார்கள் சில மேற்கத்தேய அரசியல் ஆய்வாளர்கள்.
இன்னொரு உதாரணமாக பங்களாதேஷினை எடுத்துக்கொள்ளலாம்.

அமெரிக்காவானது பங்களாதேஷுடன் மிக நெருங்கிய உறவைப் பேணுவதோடு, அதன் வளர்ச்சியில் மிகப்பெரும் பங்குதாரராகச் செயற்படுகிறது. பங்களாதேஷின் வேகமான வளர்ச்சியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

இந்த இரு நாடுகளினதும் உறவானது ‘three Ds’ அடிப்படையில் அமைந்தது என்கிறார்கள் அமெரிக்க இராஜதந்திரிகள். Democracy, Development and Denial of space for terrorism என்கிற மூன்று விடயத்திலும் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது.

அங்கு நேரடியாக முதலீடு செய்யும் நிறுவனங்களில் பெரும்பான்மையானவை அமெரிக்க நிறுவனங்கள். இதில் NGOக்களின் பங்கும் அதிகமானது.

அதே போன்றதொரு உறவையே இலங்கையுடனும் ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறது. ஆனால் இந்தத் தடவை இந்தியாவையும் இணைத்துக்கொண்டு செயற்படுகிறது.

அத்தோடு, நேபாளத்தில் நிலவும் உள்நாட்டு பிரச்சனைகளின் காரணமாக அங்கே சமஷ்டி முறை மூலம் அரசியல் தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா முனைப்புக் காட்டுகிறது.

பங்களாதேஷின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் முக்கியமானது.
போர்க்குற்ற விசாரணையும் சர்வதேசமும்
தற்போது இலங்கையின் உள்ளக விசாரணையை ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

தென்னிலங்கையில் நிலவும் அமெரிக்க எதிர்ப்புச் சிந்தனையை மாற்றவேண்டிய அவசியமும் அமெரிக்காவுக்கு இருக்கிறது.

புதிய அரசின் மேற்குலகுக்கு ஆதரவான செயற்பாடும், தமிழ்ச் சமூகம் தொடர்பில் புதிய அரசு எடுத்துவரும் ஒருசில நடவடிக்கைகளும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

உள்ளக விசாரணையில் வெளிநாட்டு விசாரணையாளர்களும் உள்வாங்கப்படவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கிறது.

உலக அரசியல் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு செயற்படுமளவுக்குத் தமிழ்த் தலைமைகள் வளர்ச்சி காணவேண்டும். தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும்.

அதன் மூலம் இனப்பிரச்சனையையும், சமூக பொருளாதார பிரச்சனைகளையும் தீர்த்து முன்னேற வியூகம் வகுக்கவேண்டும். பேரம்பேசும் அரசியலை மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

ஊடகங்களும் கல்வி அமைப்புகளும் வெறுமனே உணர்ச்சி அரசியலைக் கையில் எடுப்பதை விடுத்து மென்போக்குடன் கூடிய திறமையான அணுகுமுறையை வகுக்கவேண்டும்.

தமிழர்களும் சர்வதேசமும் – Soft Power to Smart Power
இந்தக் கட்டுரையானது, தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து, இலங்கை மீது விழுந்திருக்கும்.

சர்வதேசப் பார்வையை ஆராய்வதோடு, உள்நாட்டு அரசியல் களநிலவரங்களையும் ஆராய்கிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளினதும் கொள்கைகள் மாறியிருக்கிற காலகட்டத்தில் அவற்றை நன்றாகப் பயன்படுத்தி, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கித் தரவேண்டியது அரசியற் தலைவர்களினது கடமையாகும்.

அதற்குத் தகுதியான, சர்வதேச நாடுகளிடையே சிறந்த உறவைப் பேணக்கூடிய உறுப்பினர்களை, பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யவேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது.

அமெரிக்கா போலே Soft power இலிருந்து Smart Power எனும் கொள்கையை அடையவேண்டும்.

அதற்கான காரணம், உள்நாட்டில் நிலவுகிற இனப்பிரச்சனை. இதில் தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் அனுசரணை, வழிகாட்டுதலின் கீழ் இயங்கிவருகிறது. இந்தமுறையும், தமக்குத் தேவையான பேரம்பேசும் ஆற்றலை வழங்கும்படி கேட்கிறார்கள்.

சர்வதேச அரசியலைப் பொறுத்தவரை, எல்லாவிதமான விடயங்களையும் ஆராய்ந்துதான் தீர்மானம் எடுப்பார்கள். அதற்கான சூழ்நிலை அமைந்துவராவிட்டால், அவற்றை அமைத்துக்கொள்ளுவார்கள்.

அப்படிச் சாதகமான சூழ்நிலை நிலவும் காலகட்டத்தில், தங்களது பேரம்பேசும் அரசியல் மிகவும் முக்கியமானதாக அமையும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாதம்.

ஆனால், வாக்குபலம் மட்டுமே பேரம்பேசும் சக்திக்கு போதுமானதாக அமையாது. சிறந்த பேச்சாளர்களும் அவசியம்.2009 முதல் 2015 வரையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

2009ம் ஆண்டு, விடுதலைப்புலிகள் தங்களது ஆயுதங்களை மௌனித்த பிறகு , 2010 ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.

இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவுடன் 14 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

அதன்பிறகு, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் மஹிந்த அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. அரசினது ஆர்வமற்ற மனப்பான்மையால் பேச்சுவார்த்தையானது தோல்வியுற்றபின்,

சர்வதேச நாடுகளிடமிருந்து இலங்கை அரசுக்கு அதிகப்படியான அழுத்தங்கள் வந்தது. அதோடு, அமெரிக்காவும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணையைக் கொண்டுவந்து, அதில் வெற்றியும் கண்டது.

மஹிந்த ராஜபக்ஷவின் பலம்பொருந்திய, சர்வாதிகார உள்நாட்டு ஆட்சியில் அனைவரும் குரல் கொடுக்கத் தயங்கியபோதுதான் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

மஹிந்தவின் அரசானது சர்வதேசத்தின் அழுத்தங்கள் எதற்கும் அடிபணியாது நின்றது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் இயங்கமுடியாத சூழ்நிலை நிலவியது. தனது ஆட்சி அதிகாரத்தைப் பறிப்பதற்குத் திட்டம் தீட்டப்படுகிறதென்பதை அறிந்த மஹிந்த அரசானது தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னராகவே அடுத்த தேர்தலுக்குச் சென்றது. அதன்பிறகு, 2015 ஜனவரியில் மஹிந்தவின் ஆட்சி அதிகாரமானது எதிர்பாராத விதமாகப் பறிக்கப்பட்டது.

அது Silent revolution/Rainbow revolution என்று சிலரால் அழைக்கப்பட்டது. இந்த மாற்றத்தின் பின்னணியில் இந்தியாவின் செயற்பாடு வலுவாக இருந்ததாக தென்னிலங்கையில் விமர்சனங்கள் எழுந்தது.

இலங்கையின் அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் மஹிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ, இந்தியப் புலனாய்வுத் தலைவரின் செயற்பாடு குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

மஹிந்தவைத் தோற்கடிக்கவென மைத்திரி தலைமையில் தென்னிலங்கையில் ஒன்றுசேர்ந்த கூட்டமைப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்துகொண்டது.

சர்வதேசத்தினதும் இந்தியாவினதும் ஆலோசனை இன்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த முடிவினை எடுத்திருக்காது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
இந்தியாவில் காங்கிரஸ் அரசு வெளியேற்றப்பட்டபின் பா.ஜ.கா அரசானது ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. முன்னைய அரசு போல அல்லாது, பா,ஜ.கா அரசின் வெளியுறவுக் கொள்கைகள் உறுதியானது என்பதே சில ஆய்வாளர்கள் கருத்து.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட அஜித் டோவால் மிகவும் உறுதியானவர். சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்துபோவதைக் கடுமையாக எச்சரித்தார்.

இந்தியாவுக்கு மட்டுமல்லாது சர்வதேசத்துக்கும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டிய அவசியம் இருக்கிறது.

2015 ஜனவரித் தேர்தல் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளின் நிலைப்பாடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எதிர்த்துப் புதிதாக நிறையக் கட்சிகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. எதிர்ப்பு அரசியல் செய்வது அந்தக் கட்சிகளின் கொள்கையாகும்.

சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நகர்வுகளைத் தொடர்ந்து எதிர்ப்பவர்கள். இதே எதிர்ப்பைத் தான் சிங்களக் கடும்போக்கு கட்சிகளும் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவானது, இலங்கைக்கு எதிராக ஐநாவில் பிரேரணையைச் சமர்ப்பித்தது. இதைச் சிங்களக் கடும்போக்காளர்களுடன் சேர்ந்து இவர்களும் எதிர்த்தார்கள்.

இதில் எந்தவிதமான இன்டலெக்சுவல்த்தனத்தையும் காணமுடியவில்லை. ஆனால், தான் கொண்டுவந்த பிரேரணையை எப்படியாவது நிறைவேற்றி விடவேண்டுமென்பது அமெரிக்காவினது எண்ணமாகவிருந்தது.

. உலகின் தலைசிறந்த பேரம்பேசக்கூடிய பேச்சாளர்களைக் கொண்டிருக்கிற அமெரிக்காவானது, பெரும்பானைமையான நாடுகளின் ஆதரவைப் எப்படியோ பெற்றுக்கொண்டது. இதில் சுமந்திரனின் பங்கும் இருந்தது.

அப்போதைய காலகட்டத்தில் மஹிந்த அரசின் நெருங்கிய நண்பராக இயங்கிவந்த அவுஸ்திரிலேயாவுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு அவுஸ்திரேலியாவானது மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது.

கொஞ்சம் கடுமையாகவிருந்த பிரேரணையை நிறைவேற்றவதற்கு போதியளவு ஆதரவு இல்லாமல் இருந்தபோது,

அதில் சில திருத்தங்களை அமெரிக்கா மேற்கொண்டது. அப்படி நிறைவேற்றப்பட்ட பிரேரணைதான் இன்றும் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியாக இருந்துவருகிறது.

அதன்பிறகு, முழுச் சமூகமும் இணைந்து மகிந்தவினை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற முற்பட்டவேளை, தமிழ்ச் சமூகத்தினை வாக்கினைப் புறக்கணிக்கும்படி சில கட்சிகள் கேட்டுக்கொண்டன.

இறுதியில் சிறுபான்மை வாக்குகளே புதிய அரசின் சக்தியையும் தீர்மானிக்க உதவியாக இருந்தன.

2015க்குப் பின்னரான தென்னிலங்கை நிலவரம்
சிறுபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரியின் அரசானது தமிழ்ப் பிரதேசங்களில் இருந்த இராணுவக் கெடுபிடிகளை அகற்றியதோடு, குறிப்பிட்ட அளவு காணிகளையும் மக்களிடம் கையளித்தது. புதிய அரசின் இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் மஹிந்தவின் கூட்டம் தங்களுக்கு ஆதரவான இனவாத வாக்குகளாக மாற்றப் பார்த்தன.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்தல்,

கடும்போக்கான கருத்துகளைத் பொதுவெளியில் தெரிவித்தல் போன்ற செயற்பாடுகள் நிகழ்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தால், அது தென்னிலங்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

“சர்வதேசமும் மைத்திரி-ரணில் அரசும் சேர்ந்து நாட்டைப் பிரிக்கப்போகிறார்கள்” என்கிற மஹிந்தவின் பிரச்சாரத்துக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமையும். தென்னிலங்கை மக்களின் ஆதரவுடன்,

தமிழர்களின் பிரச்சனைய ஆராயத் தயாராகவிருக்கிற ஒரு புதிய அரசு பாராளுமன்றம் வரவேண்டிய அவசியமிருக்கிறது. தென்னிலங்கையையும் சமாளித்துக்கொண்டு தமிழர் பிரச்சனையையும் தீர்த்து வைக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலை நிலவுகிறது.

பேரம்பேசும் அரசியல் – சிறந்த Negotiators அவசியம்

பேரம்பேசுதல் நிகழும்போது இருதரப்பும் வெற்றிபெறவேண்டும். சிறந்த முறையில் பேரம் பேசக்கூடிய சக்திகளையும் நபர்களையும் கொண்டே தற்போதைய உலக அரசியல் இயங்கிவருகிறது.

அணு ஆயுத ஒப்பந்தங்கள் முதல் உள்ளூர்க் கைத்தொழில் ஒப்பந்தம் வரைக்கும் எத்தனையோ விடயங்களை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள்.

அமெரிக்காகூட ‘hard power’ எனும் கொள்கையிலிருந்து ‘smart power’ எனும் கொள்கைக்கு நகர்ந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்திலிருந்து நிறையப் பேச்சாளர்கள், இன்டெலெக்சுவல்ஸ்,சமூக அமைப்புகள் உருவாகவேண்டிய காலகட்டம் இது.

ரணில் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குப் பின்னரான அரசியல்

ரணிலின் தலைமையிலான கூட்டணிக் கட்சி வெற்றி பெற்று ரணில் பிரதமரானதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்.

அதில் தங்கள் பேரம்பேசும் பலத்தைக் காட்டவேண்டிய கட்டாயம் தமிழ்த் தலைமைகளுக்கு இருக்கிறது. உள்நாட்டிலேயே பேசிக்கொண்டிருக்காமல் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் சரியான உறவைப் பேணவேண்டும்.

SHARE