கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பிரான இனியபாரதி கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
அண்மையில் கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, அவரது வெற்றிடத்திற்கே இனியபாரதி நியமிக்கப்பட்டுள்ளர்.