கடந்த காலங்களில் சூரிய குடும்பத்தில் 9 கிரகங்கள் காணப்படுகின்றன என அறியப்பட்டிருந்த போதிலும் 2005ம் ஆண்டின் பிற்பகுதியில் புளூட்டோ ஆனது கோள் ஒன்றிற்கான இயல்புகளைக் கொண்டிருக்கவில்லை என சூரிய குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது.இவ்வாறான நிலையில் தற்போது சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் புதிய கிரகம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு தற்காலிகமாக கிரகம் – 9 (Planet Nine) என பெயர் சூட்டியுள்ளனர்.
இக் கிகரமானது ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 10,000 தொடக்கம் 20,000 ஆண்டுகள் வரை எடுக்கலாம் எனவும், சூரியனில் இருந்து 149 பில்லியன் கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத் தூரமானது சூரியனிற்கும் புளூட்டோவிற்கும் இடையிலான தூரத்திலும் 75 மடங்கு தூரம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இது ஒரு கிரகம் என்பதினை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். |