நாம் எண்ணுவதை விடவும் 10 மடங்கு நினைவாற்றல் கொண்டது நமது மூளை
341
எம்மில் பலர் எமது நினைவாற்றல் இவ்வளவுதான், இதற்கு மேல் எதனையும் எம்மால் நினைவில் வைத்திருக்க முடியாது என சிந்திப்பார்கள். ஆனால் அவ்வாறு அவர்கள் எண்ணுவதை விடவும் 10 மடங்கு நினைவாற்றல் சக்தி ஒவ்வொருவருக்கும் இருப்பதாக கலிபோர்னியாவை தளமாகக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டுவரும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இது பற்றி கருத்து தெரிவித்த விஞ்ஞான கற்கைகளுக்கான Salk கல்விநிறுவனத்தை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான Terry Sejnowski “இந்த நினைவாற்றலை ஆனது கணினியில் சேமிக்கப்படும் தரவு அளவினை அளக்கும் அலகில் எடுத்துக்கூறினால் 10 பீட்டாபைட் (Petabyte)அளவிற்கு சேமிக்க முடியும் எனவும், இது உலகளாவிய இணையத்தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளுக்கு சமனாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.