இரண்டு பேருக்கு ஒரே நூலில் காத்தாடி விடும் நயன்தாரா.

516

கேரளத்து பேரழகி நயன்தாரா உதயநிதியுடன் இது நம்ம ஆளு படத்துக்கு பிறகு மீண்டும் நண்பேண்டா படத்தில் நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் அம்மணி இது நம்ம ஆளு படப்பிடிப்புகளிலும் பிஸியாக இருக்கிறார். தற்போது உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடிக்கும் ‘நண்பேண்டா’ படத்தின் படப்பிடிப்புகள் கும்பகோணத்தில் நடந்து வருகிறது.

அங்கு கடந்த 10 நாட்களாக பொது இடங்களில் படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. அதே கும்பகோணத்தில் நயன்தாராவும் சிம்புவும் நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பும் நடக்கிறது.

மாறி மாறி இரண்டு படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா. சில நாட்கள் காலையில் ஒரு படத்திலும் மாலையில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதற்காக இரு படத் தரப்பும் இணைந்து பேசி ஷெட்யூலை முறைப்படுத்தி உள்ளனர்.

இரண்டு படப்பிடிப்பு தளத்திலும் அவர் இல்லாத நேரத்தை வீணடிக்காமல் அவர் இல்லாத நேரத்தில் வேற காம்பினஷன் காட்சிகளை உருவாக்கி வருகின்றனர்.

இரண்டு படங்களுமே காமெடியை மையமாக வைத்த உருவாகி வரும் காதல் கதை என்பதால் எந்த வித உடல் ரீதியான மற்றம் இல்லாமல் போனதால் ஈசியாக போனது என்று இருதரப்பும் கூறுகின்றனர்

திரும்பிய பக்கம் எல்லாம் நயன்தாரா படப்பிடிப்பு நடப்பதால் நயன்தாரா முகம் கும்பகோணம் மக்களுக்கு ரொம்ப பரீட்சையமாகி விட்டது என்று முனுமுனுக்க ஆரம்பித்துள்ளனர்.

 

SHARE