பிரேசில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்மணிகளுக்கு கால்பந்து போட்டித்தொடர் என்பது பணம் அறுவடை செய்யும் சீசன்.

559

உலகின் மிகப்பழமையான தொழிலை செய்து கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விப் பதற்காக, பிரேசில் நாட்டில் சுமார் 10 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். வாடிக்கை யாளர்களை கவருவதற்காக, ஸ்போக்கன் இங்லீஷ் வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற்றுள்ள பாலியல் தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

20வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை , 12ம்தேதி, தொடங்கி அடுத்த மாதம் 13ம்தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகளை கண்டு ரசிக்க உலகமெங்கும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். அதேபோல லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரேசிலுக்கு நேரடியாக வந்து போட்டிகளை பார்த்து வீரர்களை உற்சாகப்படுத்த பிரயாணப்பட்டுள்ளனர்.

பிரேசிலுக்கு வரும் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக அந்த நாட்டு பாலியல் தொழிலாளர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு தயாராகி வருகிறார்களாம். பிரேசில் நாட்டில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகும். எனவே விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்மணிகளுக்கு கால்பந்து போட்டித்தொடர் என்பது பணம் அறுவடை செய்யும் சீசன்.

பிரேசில் நாட்டில் பீலோ ஹோரிசோன்ட் நகரம் உலகின் மதுபார் தலைநகர் என்ற செல்லப்பெயர் கொண்டது. 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட இங்கு 12 ஆயிரம் உணவகங்களும் உள்ளன. உல்லாச விரும்பிகளுக்குதேவையான அனைத்து வசதிகளும் இங்குள்ளன. அதில் மதுவை தவிர்த்து மாதுவும் ஒன்று. இந்த நகரில்தான் அதிகப்படியான செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனராம்.

பல நாட்டு ரசிகர்களும் போட்டியை பார்க்க வருவார்கள் என்பதால் மொழிப்பிரச்சினையை தீர்க்க பாலியல் தொழிலாளர்கள் ஆங்கில மொழியை ஸ்போக்கன் இங்லீஷ் வகுப்பு மூலம் படித்து வருகிறார்கள். தேசிய மொழியான போர்த்துகீசத்தை தவிர பிற மொழி தெரியாமல் இருந்தால் பிசினஸ் டல் அடித்துவிடும் என்பதை உணர்ந்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

கால மாற்றத்துக்கு ஏற்ப தொழிலை நவீனப்படுத்தவும் செக்ஸ் தொழிலாளர்கள் தயங்கவில்லை. வெளிநாட்டு ரசிகர்கள் பணத்தை கையிலெடுத்துக் கொண்டு பிரேசில் வருவது குறைவு என்பதால் கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்ய மிஷின்களை வாங்கி வைத்துள்ளனர் பாலியல் தொழிலாளர்கள். கட்டணத்தை கிரெடிட் கார்டு மூலம் செலுத்திவிட்டு குறிப்பிட்ட நேரத்துக்கு செக்ஸ்சில் ஈடுபடலாமாம்.

பிரேசிலில் விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்டது என்பதை அடிப்படையாக வைத்து, அதை ஒரு குடிசை தொழில் போல மாற்றிவிட்டனர் அங்குள்ள பெண்கள். கால்பந்து போட்டியை பயன்படுத்தி பணம் ஈட்ட குடும்ப பெண்மணிகளும் களமிறங்கியுள்ளனராம். “குழந்தைகள் தூங்கி முழிக்கும் நேரத்தில் விபச்சாரம் செய்துவிட்டு பணத்தோடு வந்துவிடுவேன்” என்று இதுவரை செக்ஸ் தொழில் செய்யாத பெண் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரேசில் நாட்டுக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்கும் ஆசை விபரீதமாக சென்றதன் விளைவு, குழந்தைகளையும் செக்ஸ் தொழிலில் இறக்கிவிட்டுள்ளனர். அந்த நாட்டின் ரெசிபே நகரில் குழந்தை பாலியல் தொழிலாளர் அதிகமாக உள்ளனர். பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு உலக கோப்பை கால்பந்தாட்டம் முடியும்வரை செக்ஸ் தொழில் செய்யுமாறு பெற்றோராலேயே அவர்கள் வீதிக்கு அடித்து விரட்டப் படுகிறார்கள்.

கால்பந்து போட்டிகள் நடைபெறும் பிரேசிலின் 12 நகரிலும் சாலையின் இருபுறங்களிலும் பாலியல் தொழிலாளர்கள் நின்று அரைகுறை ஆடைகளுடன் கையை ஆட்டிக்கொண்டிருக்கும் காட்சிகள் இப்போது பிரேசிலில் சர்வ சாதாரணமாகிவிட்டன.

SHARE