தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சோதனை நடத்திய விஞ்ஞானி

356
நோர்வே நாட்டை சேர்ந்த விஞ்ஞானி Andreas Wahl , தண்ணீருக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சோதனை நடத்தியுள்ளார்.அதாவது தண்ணீருக்குள் துப்பாக்கியால் சுடும்போது குண்டு சீறிப்பாயாது என்ற அறிவியல் தத்துவத்தை நிரூபிக்க இவ்வாறு சோதனை நடத்தியுள்ளார்.

இதற்காக தலை மட்டும் வெளியே தெரியும்படி, கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டார்.

தனது மார்புக்கு நேர் எதிரே துப்பாக்கியை ஸ்டாண்டில் பொருத்தி 3 மீட்டர் தொலைவில் நிறுத்தினார்.

பின்னர் ஒரு கயிற்றின் ஒரு முனையை துப்பாக்கி விசையில் இணைத்து மறுமுனையை தன்னிடம் வைத்துக் கொண்டார்.

அதன் பிறகு, ரெடி, 3,2,1, என்ற கூறியபடியே துப்பாக்கியை அழுத்த, அடுத்த நொடி குண்டு பாய்கிறது.

அறிவியல் கூற்றுப்படி, குண்டு 1.5 மீற்றர் தாண்டும்போது, வேகம் இழந்து தண்ணீரில் மெதுவாக மூழ்கியது.

அறிவியல் கூற்றை நிரூபித்த மகிழ்ச்சியுடன் நீச்சல்குளத்திலிருந்த குண்டை எடுத்த Andreas புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

SHARE