சென்ட்ரா பெய்டாஸ், இலங்கைக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பிரச்சினை எழுப்பவுள்ளது. சென்ட்ரா பெய்டாஸ் தென் சூடானின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் போலியான அறிக்கை ஒன்றை தயாரித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரை இலங்கைக்கு எதிரான விசாரணையை மேற்கொள்ளும் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விடயத்தை வைத்து சிறிலங்கா அரசாங்கம் இந்த குழு மீதான நம்பிக்கை தொடர்பில் பிரச்சினை எழுப்பும் தெரிவிக்கப்படுகிறது.