14 வயது சிறுமி சீரழித்து தலைமறைவான ஜோதிடர் கைது!!

830

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த 54 வயது ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹுங்கம பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஜோதிடர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

ரன்ன பிரதேசத்திற்குச் சென்றிருந்த போது சிறுமியை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்து சிறுமியின் சிறிய தந்தை, தாய் உள்ளிட்ட நால்வரை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபர்களிடம் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE