தூரப்பயணங்கள் மேற்கொள்ளும் போது ஏற்படும் தண்ணீர்ப் பிரச்சனையை தீர்க்கும் முகமாக நவீன ட்ரிங் போத்தல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.காற்றில் உள்ள நீராவியை நீர்த்துளிகளாக சேமிக்கக்கூடிய இந்த போத்தலை அவுஸ்திரேலியாவை சேர்ந்த குழு ஒன்று உருவாக்கியுள்ளது.
ஒரு மணிநேரத்தில் காற்றிலிருந்து 0.5 லீற்றர்கள் அவுடைய நீரை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும் இந்த தொழில்நுட்பத்தின் ஊடாக உலகெங்கிலும் உள்ள 1.2 பில்லியன் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் காற்றிலுள்ள நீரை உறுஞ்சுவதானல் வெப்பநிலை அதிகரித்தல் போன்ற சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் நாளடைவில் ஏற்படும் என்பதனையும் மறுக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. |