கிழக்கு சீனாவில் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு

540
கிழக்கு சீனாவில் உள்ள ஜியான்சூ மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட பழமையான கல்லறைகளை சீனாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை கி.மு. 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹன் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த கல்லறைகள் ஜியான்சூ மாகாணத்தில் உள்ள பிசோயூ நகரத்தில் உள்ள ஒரு பெரிய குளத்தில் வடிகால் வெட்டும்போது  கண்டுபிடிக்கப்பட்டதாக நான்சிங் மியூசியத்தின் தொல்பொருள் ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர் மா யாங்கியாங் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்று அதிகமான எண்ணிக்கையில் ஹன் கல்லறைகள் கண்டுபிடிக்கப்படுவது அரிதான ஒன்றாகும். இவை இறந்தவர்களின் இறுதிச் சடங்கு பற்றி ஆராய உதவியாக இருக்கும் என்றார்.

கண்டுபிடிக்கபட்ட கல்லறைகள் அனைத்தும் 20 முதல் 30 சென்டிமீட்டர் ஆழத்தில்தான் புதைக்கப்பட்டுள்ளன. 25-க்கும் மேற்பட்ட கல்லறைகள் சூறையாடப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தோண்டி எடுக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளரிடம் குளத்தின் ஒப்பந்ததாரர் 2 லட்சத்து 40 ஆயிரம் டாலர் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக, நகர கலாச்சார மையம் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு காண்டிராக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

SHARE