இந்நேரத்தில் பிரித்தி , வாடியா மீது ஒரு புகாரை அளித்துள்ளார். இந்தப்புகாரில் , மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தபோது வாடியா தம்மிடம் அத்துமீறி நடந்து கொண்டார். தனக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவு கொடுத்தார் என்றும் கூறியுள்ளார். புகாரை பெற்ற போலீசார் . ஐ.பி.சி. 354, 504, 506, மற்றும் 509 பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.
மேலும் இதற்கான ஆதாரங்கள் திரட்டி வருகின்றனர். கிரிக்கெட் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த 100 க்கும் மேற்பட்ட காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் உண்மை இருக்கும் பட்சத்தில் வாய்டா கைது செய்யப்படும் சூழல் உருவாகும்.
மதிப்பளிக்க வேண்டும்: இந்நிலையில் பிரித்தீ ஜிந்தா, வெளியிட்டுள்ள செய்தியில் , இந்தப்புகார் யாரையும் பழிவாங்கும் நோக்கத்தில் கொடுக்கப்படவில்லை. எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற காரணத்திற்காக கொடுத்துள்ளேன். மீடியாக்கள் எனது தனிப்பட்டி விஷயத்திற் மதிப்பளிக்க வேண்டும். தேவையில்லாமல் பெரிதுப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுள்ளார்.
இந்தப்புகார் குறித்து வாட்டியா கூறியிருப்பதாவது; இந்தப்புகார் பொய்யானது , ஆதாரமற்றது என்பது எனக்கு தெரியும். இது எனக்கு அதிர்ச்சியை தருகிறது. வழக்கை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்.
வெட்கப்படுகிறேன்: பிரீத்திஜிந்தா தனது டுவீட்டரில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் ஒன்றும் பலமானவர் அல்ல. ஆனால் என்னுடன் உண்மை இருக்கிறது. இது நிச்சயம் வெல்லும். எனது வாழ்நாளில் இதுவரை நான் யார் மீதும் குற்றம்சாட்டியதில்லை. தற்போது நடந்ததை நான் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை. யாரும் எனக்கு உதவவில்லை என நினைக்கும் போது மிக வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணான எனக்கு பாதுகாப்பு இல்லை, என நினைத்து வெட்கப்படுகிறேன். புகார் தருவதை தவிர வேறு வழிஇல்லை. போலீசார் நியாயமான, வேகமான விசாரணை நடத்தி எனக்கு நியாயம் தருவார்கள் என நம்புகிறேன்.