உலக புற்றுநோய் தினம்

437
புற்றுநோய் கண்டுபிடிப்பு, ஒருவருடைய மரணத்தின் அறிவிப்பாகவே கால் நூற்றாண்டுக்கு முன்புவரை இருந்து வந்தது.மருத்துவ வளர்ச்சியாலும் ,விழிப்புணர்ச்சியாலும் நான்கு புற்றுநோயாளிகளில் மூன்று பேரை காப்பாற்றும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம்.

மேலும், எல்லோரையும் குணப்படுத்தவும் புற்றுநோய் ஏற்படுவதை புறக்கணிக்கவும் இந்த உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிப்பு நிச்சயம் கைகொடுக்கும்.

புற்றுநோய்

உடல் செல்களில் உள்ள டிஎன்ஏ (DNA) சிதைவதே புற்றுநோயாகும். டிஎன்ஏ சிதைவால் அந்த செல் அழிகிறது. இது அடுத்தடுத்த செல்களிலும் பரவி அந்த செல்களும் சிதைகிறது.

அந்த உறுப்பின் ஒரு பகுதியில் சிதைந்த செல்கள், வழக்கமான செயல்பாட்டிலிருந்து திரிந்து சேர்ந்து குவிந்து புற்றுநோய் (Cancer) கட்டியாகிறது.

வரும் வகைகள்

உடலின் எந்த பாகத்தில் இந்தவகை கட்டி ஏற்படுகிறதோ அந்த உறுப்பின் புற்றுநோயாக சொல்லப்படுகிறது.

மூளை, மார்பகம், நுரையீரல், வயிறு, கல்லீரல் கர்ப்பப்பை, எலும்பு, ரத்தம் என புற்றுநோயில் பலவகை உண்டு.

கட்டுப்படுத்த முடியாமல் உற்பத்தியாகும் புற்றுநோய் செல்களுக்கு ஹார்மோனில் ஏற்படும் கோளாறுகளும் ஒரு காரணம்.

புகைப்பிடித்தல், இரத்தஓட்ட சீர்கேடு, நோய் எதிர்ப்புசக்தி குறைவு என பல காரணங்கள் கூறப்படுகிறது.

மார்பக புற்றுநோய்(Breast cancer) அதிகமாக பெண்களுக்கு ஏற்பட்டு வருகிறது. மார்பகத்தில் செல்கள் இயல்பைவிட அதிகமாக வளர்ச்சியடைவது அதற்கான அறிகுறி.

பெண்களுக்கு கருவறையில் உள்ள அசுத்தங்களாலும் கற்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. அதனால்தான், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கற்பப்பை சோதனை செய்துகொள்ளவும் சுத்தம் செய்துகொள்ளவும் அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

புற்றுநோய்தான் என்பதை உறுதிசெய்ய அந்த திசுக்களை நறுக்கி எடுத்துச்சென்று அதற்குரிய சோதனை நிலையங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.

கர்ப்பப்பை புற்றுநோய் ஆரம்பத்திலே கண்டுபிடிக்கப்பட்டால் கர்ப்பப்பையை அகற்றிவிட்டு கூட, உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

தாவரங்களை போல, மீண்டும் முளைக்காத உறுப்புகளை புற்றுநோயால் பறிகொடுத்துவிட்டு, முடமாக வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சில சிகிச்சை முறைகள்

ஆரம்பத்திலே நோய் கண்டறியப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சைமுறையால் அகற்றப்படாவிட்டால் அது ஆளையே சீக்கிரத்தில் அழிப்பது உறுதி.

புற்றுநோய் தாக்கப்பட்டுள்ள அளவுக்கும் உறுப்புக்கும் ஏற்ப சிகிச்சைமுறையும் தேர்வுசெய்யப்படுகிறது. பல சிகிச்சைமுறைகள் உள்ளன.

கீமோதெரபி (Chemotherapy) கருவி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களையும் ஆரோக்கியமான செல்களையும் பிரித்தறிந்து குணப்படுத்துகிறது.

IMRT கதிர்வீச்சு சிகிச்சையால் மூளையில் உண்டான புற்றுநோய் கட்டியையும் குணப்படுத்த முடிகிறது.

இந்த நோய்க்கு பல மாதங்கள், ஆண்டுகள் கணக்கில் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள வேண்டியது அவசியம் உள்ளது.

மருத்துவம் முன்னேற்றமடைந்தாலும் மனிதர்கள் மிகவும் மனம் சஞ்சலப்படும் இரண்டு பெரிய நோய்கள் கேன்சர், எய்ட்ஸ், இதில் எய்ட்ஸ்க்கு அண்ணனாய் கேன்சர்தான் நம்மை முதலில் எட்டிப்பிடித்தது.

உயிருக்கு உயிரான காதலர்கள், கதாநாயகனுக்கு புற்றுநோய் வந்து, மரணம் நிச்சயமானதால், காதலி வாழ தன் காதலையே தியாகம் செய்யும் கதைகள் சினிமாவில் பல வந்து, மக்கள் அனுதாபத்தோடு பெரிய வெற்றிகளும் பெற்றன.

இப்போது, தெருவுக்கு இருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது, அந்த நோய்பற்றிய அதிர்ச்சியை குறைத்துவிட்டது. அதனால், நோயின் கொடுமை குறையுமா? பாதிக்கப்பட்டவர்கள் படாதபட்டுதான் இறக்கிறார்கள்.

சர்வதேச முயற்சி

சர்வதேச அமைப்பு இந்த தினத்தை 2008 பிப்ரவரி 4 ல் அறிவித்தது, புற்றுநோய்க்கான தடுப்பு,(Prevention), குறைப்பு,(Deduction), கவனிப்பு(Treatment), ஆகிய விழிப்புணர்வுக்காக. 2020 க்குள் இதை குறைக்கும் இலக்கு வைத்து செயல்படுகிறது.

புற்றுநோய் என்று அறியாமலே அந்த நோயால் இறந்த நம் முன்னோர்கள் பலர் இருக்கலாம். நம் நவீன உலக வளர்ச்சியோடு புற்றுநோய்க்கான காரணங்களும் மறைந்திருக்கிறது.

நம் பிரபலங்களிலும் சிலர், இந்த நோயால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார்கள், மீளாது போயிருக்கிறார்கள்.

இந்த நோய் யாருக்கும் வரலாம். அப்படி வந்த யாரையும் காக்கலாம். இதுவரை இதுதான் நிலை.

– மரு.சரவணன்

SHARE