அமெரிக்காவின் மதிப்பு மிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சேதுராமன் பச்சநாதனை ஜனாதிபதி ஒபாமா நியமித்து உள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்த சேதுராமன், பெங்களூரில் உள்ள இந்திய விஞ்ஞான கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி.) பொறியியலில் இளநிலை பட்டமும், ஐ.ஐ.டி.யில் உயர்நிலை பட்டமும் பெற்றார்.
கனடாவில் உள்ள ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், கடந்த 1998-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். மேலும் 400-க்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.