ஆனால் இந்த குளிர்பானத்தில் 85 சதவிகிதம் மாதுளை சாறும், 15 சதவிகிதம் அவுரிநெல்லி சாறும் கலந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தங்களது புகாரில் குறிப்பிட்டிருந்தது. இவர்களின் குளிர்பானம் கோகோ-கோலாவை விட ஐந்து மடங்கு அதிக விலையுள்ளதாகக் கருதப்படுகின்றது. எனவே தவறான விளம்பரம் மூலம் கோகோ-கோலா வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றது என்று பொம் நிறுவனம் குற்றம் சுமத்தியது.
இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தோணி கென்னடி கோகோ-கோலாவின் தயாரிப்பில் 99.4 சதவிகிதம் ஆப்பிள் மற்றும் திராட்சை பழ சாறும் 0.5 சதவிகிதமே மாதுளை மற்றும் அவுரிநெல்லி சாறும் கலந்துள்ளது என்று தெரிவித்தார்.
பெரிய அளவில் பெயர் போடப்பட்டுள்ளபோதிலும் அதன்கீழ் சிறிய எழுத்துகளில் கோகோ-கோலாவின் விளம்பரத்தில் ஐந்து பழச் சுவைகளின் கலவை என்று குறிப்பிடப்பட்டிருப்பதுவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதன்மூலம் பொம் வொண்டர்புல் நிறுவனம் கோகோ-கோலா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர அனுமதிப்பதாக நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.