பேஸ்புக்கின் அசுர வளர்ச்சி இப்படித்தான் இருக்குமாம்

336
சமூகவலைத்தளங்களின் முதல்வனாக திகழ்ந்துவரும் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.இவ்வாறு செல்கையில் 2030ம் ஆண்டளவில் பேஸ்புக்கினை பாவிப்பவர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை தொட்டுவிடும் என அதன் நிறுவுனர் மார்க் ஷுக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் பேஸ்புக் நிறுவனம் தனது 12வது ஆண்டு நிறைவினை நண்பர்கள் தினமாக வெகு பிரம்மாண்டமாக கொண்டாடியிருந்தது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மார்க் ஷுக்கர் பேர்க் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது பேஸ்புக் சமூகவலைத்தளத்தினை பாவிப்பவர்களின் எண்ணிக்கை 1.6 பில்லியனாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE