டுவிட்டரின் அதிரடி நடவடிக்கை

324
அதிகளவு பயனர்களைக் கொண்ட முன்னணி சமூகவலைத் தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது அதிரடி நடவடிக்கை மூலம் சுமார் 125,000 வரையான கணக்குகளை முடக்கியுள்ளது.அண்மைக் காலமாக சமூகவலைத்தளங்களின் ஊடாக மும்முரப்படுத்தப்பட்டுவரும் பயங்கரவாத நடவடிக்கைகளை காரணமாகக் கொண்டே இச் செயன்முறையை டுவிட்டர் மேற்கொண்டுள்ளது.

இதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பே அதிகளவில் தமது செயற்பாடுகளை மும்முரப்படுத்துவதற்காக டுவிட்டர் தளத்தினை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வரை உலகெங்கிலும் சுமார் 500 மில்லியனிற்கும் அதிகமான பயனர்களை டுவிட்டர் கொண்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை பேஸ்புக் வலைத்தளமும் போலியான கணக்கினைக் கொண்டிருப்பவர்களினை முடக்குவதில் மிக வேகமாக செயற்பட்டுவருகின்றமை தெரிந்ததே.

SHARE