கேரளாவில் பரபரப்பாக பேசப்படுவது சோலார் பேனல் ஊழல். இதில் சரிதா நாயர் என்ற பெண் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சிக்கி இருக்கிறார்கள். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இதை மையமாக வைத்து சோலார் சுவப்னம் என்ற பெயரில் மல்லுவுட்டில் படம் உருவாகி இருக்கிறது. ஜாய் ஆண்டனி இயக்கி இருக்கிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி பட தயாரிப்பாளர் ராஜு ஜோசப் கூறும்போது, சரிதா நாயர்தான் இப்படத்தின் ஹீரோயினாக நடிக்கும் பூஜாவுக்கு ரோல் மாடல்.
இதுபற்றி அறிந்த சரிதா நாயர் திடீரென்று என்னுடைய வீட்டுக்கு சிலருடன் வந்தார். அப்போது வீட்டில் நான் இல்லை. 85 வயதான எனது தாயார் மட்டும் இருந்தார். அவரிடம் படத்தை வெளியிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டிவிட்டு சென்றார். சரிதா நாயரையும், சோலார் பேனல் விவகாரத்தையும் இதில் முழுமையாக வைக்கவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றத்தைத்தான் மையப்படுத்தி இருக்கிறோம்Õ என்றார். படத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது