கூகுள் தரும் மற்றுமொரு இலவச சேமிப்பு வசதி

345
Safer Internet Day 2016 இனை கொண்டாடும் முகமாக கூகுள் நிறுவனம் 2GB வரையான இலவச சேமிப்பு வசதியினை வழங்க முன்வந்துள்ளது.இம் மேலதிக சேமிப்பு வசதியானது கூகுள் ட்ரைவினூடாகவே வழங்கப்படுவதுடன் கூகுள் கணக்குகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதினை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனைப் பேறுவதற்கு கூகுள் கணக்கினுள் உள்நுழைந்து பாதுகாப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இதன் ஊடாக இரண்டு நிலை சரிபார்ப்பு, கோப்புக்களை மீட்டெடுத்தல், ஏனைய சாதனங்களுடன் இணைத்தல் போன்ற செயற்பாடுகளின் போதான பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும்.

SHARE