குறுஞ் செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அந்த அமைப்பின் மீது சுமத்தும் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க இந்த பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தகவல் வழங்கியுள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக கூறி, நாடு முழுவதிலும் உள்ள விகாரைகளுக்கு செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த விகாரைகளில் உள்ளவர்களையும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலில் பங்களிப்பு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், பொதுமக்களும் குழப்பமடைந்துள்ளனர். அளுத்கம பிரதேசத்தில் தம்மை பௌத்தர்கள் என்று கூறிக்கொள்ளும் காடையர்கள் விகாரைகளில் கூடி வருவதாகவும் அவர்கள் அங்கு மீண்டும் மோதல்களை ஏற்படுத்தும் நிலைமைகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அம்பாறையில் சிங்கள மக்கள் வாழ்ந்து வரும் கிராமங்கள் மற்றும் விகாரைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.