மஹிந்த இந்தியாவிற்கு விக்னேஸ்வரனை அழைத்தது ஒரு கல்லில் இரு காய்களை வீழ்த்தவே!

608

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி யின் பத­வி­யேற்பு நிகழ்­வுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்­னேஸ்­ வ­ரனை அழைத்துக் கொண்டு செல்­ வ­தற்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ, முயற்சி மேற்­கொண்­டி­ருந்த போதும் அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. தாம் ஜனா­ தி­பதி மஹிந்த ராஜபக்ஷவுடன், புது­டில்­லி க்குப் பயணம் மேற்­கொண்டால், மத்­ திய, மாகாண அர­சு­க­ளுக்கு இடையில் இணக்­க­மான சூழல் நில­வு­வ­தான தோற்றம் ஏற்­பட்டு விடும் என்­பதால், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்­ வரன் அந்த அழைப்பை நிரா­க­ரித்து விட்டார்.

இந்த அழைப்­புக்கு பின்­னாலும், அது நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தற்கு பின்­ னாலும், பல இரா­ஜ­தந்­திரக் காய்­ந­கர்த்­ தல்கள் இருந்­தன. இந்த அழைப்பை அவர் நிரா­க­ரித்­ததை, அர­ச­த­ரப்பைச் சேர்ந்­த­வர்கள் மட்­டுமே கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளனர். இது புதிய நல்­லி­ ணக்க முயற்­சிக்­கான வாய்ப்பு என்றும், அதனைப் பயன்­ப­டுத்திக் கொள்­ளாமல், நழுவ விட்­டு­விட்டார் விக்­னேஸ்­வரன் என்றும் அர­ச­ த­ரப்­பி­லுள்ள அமைச்­ சர்கள் டக்ளஸ் தேவா­னந்தா, வாசு­தேவ நாண­யக்­கார உள்ளிட்ட பலரும் கருத்­து­ களை தெரி­வித்­துள்­ளனர்.

ஆனால், இப்­படி அர­ச­ த­ரப்­பினர் கூறிக் கொள்­வது இது தான் முதன்முறை­யல்ல. பிரித்­தா­னி­யாவின் ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ 2010ஆம் ஆண்டு நிகழ்த்­த­வி­ருந்த உரை­யொன்று புலம்­பெயர் தமி­ழர்­களின் எதிர்ப்­பினால், இரத்துச் செய்­யப்­பட்­டது.

அப்­போது, தமிழர் பிரச்­சி­னைக்­ கான தீர்வு குறித்து அதில் அறி­விக்­க­ வி­ருந்­த­தா­கவும், அந்த வாய்ப்பு நழு விப் போய் விட்­ட­தா­கவும், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கூறி­யி­ருந்தார் என்­ பது பல­ருக்கும் நினைவில் இருக்­கலாம். ஆனால், அந்தச் சம்­பவம் நிகழ்ந்து கிட்­ட த்­தட்ட நான்கு ஆண்­டு­க­ளாகி விட்ட போதிலும், இன்­னமும் கூட தமிழர் பிரச்­ சி­னைக்கு என்ன தீர்வு என்­பதை ஜனா­தி­ பதி மஹிந்த ராஜ­பக்ஷ கூற­வே­யில்லை.

ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­ கத்தில் மட்டும் தான் அதைக் கூறுவேன் என்ற பிடி­வாதம் அவ­ருக்கு இருக்­கி­ றதோ தெரி­ய­வில்லை. இங்­குள்ள தமி­ ழர்­களின் பிரச்­சி­னைக்கு என்ன தீர்வு என்­பதை இங்கே தான் வெளி­யிட்­டி­ருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்­ய­ வில்லை. அந்த உரை தடுக்­கப்­பட்­டது என்­பதால், வாய்ப்பு நழுவி விட்­ட­தாக அர­சாங்கம் குற்­றச்­சாட்டை முன்­வைத்­ தது. அது­போல் தான், இப்­போதும் நடந்­தி­ருக்­கி­றது. ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­கஷவுடன், வடக்கு மாகாண முத­ ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் புது­டில்லி சென்­றி­ருந்தால், எல்­லாமே நடந்­தி­ ருக்கும் போல அமைச்­சர்கள் பலரும் கருத்து வெளி­யிட்டு வரு­கின்­றனர். அர­ சாங்­கத்­துடன் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ ப­டுத்­து­வ­தற்கு, இந்தப் பயணம் என்ன வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்கப் போகி­றது?

ஆரம்­பத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­ மைப்பின் அர­சியல் வட்­டத்­துக்குள் சிக்கிக் கொள்­ளாமல், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், அர­சாங்­கத்­துடன் இணக்கப் போக்கை கடைப்­பி­டிக்க முயன்றார். ஆனால், அதன் பலன் என்­ ன­வா­யிற்று? அவ­ருக்­கான அதி­கா­ரங்­ களை ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்­தி­ர­ சிறி முடக்கிப் போட்டார். தலைமைச் செய­லரைக் கூட மாற்றிக் கொள்ள முடி­ யா­த­ள­வுக்கு மாகாண முத­ல­மைச்­சரின் அதி­கா­ரங்கள் செய­லற்­ற­தாக்­கப்­பட்­டன. அவ­ருக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் எது­வுமே நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை அர­சாங்கம் வெறும் பகடைக்காயாக மாற்றி விட்­டுள்­ளது. இப்­படித்தான், வடக்கு மாகாண சபைக்கும் மத்­திய அர­ சுக்கும் இடை­யி­லான உறவு சீர்­கு­லைக்­ கப்­பட்­டது. வடக்கு மாகாண சபை­யுடன் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்பை அர­சாங்கம் உரு­வாக்க விரும்­ பினால், முத­ல­மைச்­சரை அலரி மாளி­ கைக்கு அழைத்துப் பேசலாம். பிரச்­சி­ னை­களைத் தீர்த்து இடை­வெ­ளியைக் குறைக்கலாம்.

புது­டில்­லிக்கு அழைத்துச் சென்று தான், நல்­லி­ணக்க வாய்ப்பை உரு­வாக்க வேண்டும் என்­றில்லை. புது­ டில்­லிக்கு முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ ரனை அழைத்துச் சென்­றி­ருந்தால், இந்­ தியப் பிர­த­ம­ரையும், ஜனா­தி­ப­தி­யையும் அறி­மு­கப்­ப­டுத்தி வைத்­தி­ருப்பார் ஜனா­ தி­பதி.

அவ்­வ­ளவு தானே தவிர, அதற்கு அப்பால், அவர்­க­ளுடன் தமி­ ழரின் பிரச்­ சி­னைகள் குறித்து பேசு­வ­ தற்­கான வாய்ப்பு கிடைத்­தி­ருக்­காது. ஏனென்றால், ஜனா­தி­பதி, வெளி­வி­வ­ கார அமைச்சர் போன்றோர் இருக்கும் போது, ஒரு மாகாண முத­ல­மைச்­ சரால் அவ்­வாறு பேச முடி­யாது. வெறு­ மனே நலன் விசா­ரித்துக் கொள்­ளலாம், வாழ்த்துக் கூறிக் கொள்­ளலாம் அவ்­ வ­ளவு தான். ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ பக்ஷ தன்­னுடன், முத­ல­மைச்சர் விக்­ னேஸ்­வ­ரனை அழைத்துச் செல்ல முயன்­ற­தற்குக் காரணம், நல்­லெண்ணம் என்­பதை விட, இரா­ஜ­தந்­திரம் என்­பதே சரி­யா­னது.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜப­க்ஷ வின் வெளி­நாட்டுப் பய­ணங்­களின், போது எந்த நாட்­டுக்குப் பயணம் மேற்­கொள்­ கிறார் என்­பதைப் பொறுத்து, அவ­ருடன் செல்லும் குழு­வினர் தீர்­மா­னிக்­கப்­ப­டு­வ­ துண்டு. அவர், ஐ.நாவுக்கோ, அமெ­ரிக்­ கா­வுக்கோ, இந்­தி­யா­வுக்கோ செல்லும் போது தமிழ் அர­சி­யல்­வா­திகள் எவ­ ரை­யா­வது தனது குழுவில் சேர்த்துக் கொள்வார்.

முஸ்லிம் நாடு­க­ளுக்குச் செல்லும் போது, முஸ்லிம் அமைச்­ சர்கள் அர­சி­யல்­ வா­தி­க­ளையும், வத்­ திக்கான் போன்ற இடங்­க­ளுக்குச் செல்லும் போது, கத்­தோ­லிக்க அரசி­ யல்­வா­தி­க­ளையும் தன் குழுவில் சேர்த்துக் கொள்வார். மற்­றைய நாடு­க­ ளுக்குப் பயணம் மேற்­கொள்ளும் போது, பொருத்­த­மான ஏனைய அர­சி­யல்­ வா­தி­களை இணைத்துக் கொள்வார். தன்னைச் சுற்றி, அந்த நாடு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களே இருக்­கின்­றனர் என்ற விம்­பத்தை காண்­பிக்­கின்ற ஒரு முயற்­சியே இது.

பொது­வாக தமிழர் பிரச்­சி­ னைக்கு தீர்வு காணப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்தும் நாடு­க­ளுக்கோ, ஐ.நாவுக்கோ செல்லும் போது, தமது தரப்பில் இருக்கும் தமிழ் அர­சி­யல்­வா­ தி­களை அழைத்துச் செல்வார் ஜனா­தி­ பதி மஹிந்த. அமைச்சர் டக்ளஸ் தேவா­ னந்தா, பிரதி அமைச்சர் கருணா எனப்­ படும் வி.முர­ளி­தரன், முன்னாள் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் பிள்­ளையான் எனப்­படும், சந்­தி­ர­காந்தன் போன்­ற­ வர்கள் இவ்­வாறு பல நாடு­க­ளுக்கும், ஐ.நாவுக்கும் பய­ணங்­களை மேற்­ கொண்­டி­ருந்­தனர்.

முதல்­மு­றை­யாக, அர­ச­ த­ரப்பைச் சேராத ஒரு­வரை ஜனா­தி­ பதி மஹிந்த ராஜ­பக்ஷ, இந்­தி­யா­வுக்கு அழைத்துச் செல்ல முயன்­ற­தற்கு பல கார­ணங்கள் உள்­ளன. தமிழர் பிரச்­சினை விவ­கா­ரத்தில், மன்­மோகன் சிங் போல நரேந்­திர மோடி இருக்­க­மாட்டார் என்றும், அழுத்­தங்­களைக் கொடுக்க முனை­யலாம் என்றும் இலங்கை அர­ சுக்கு ஒரு அச்சம் இருந்­தது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ சரை அழைத்து கொண்டு சென்றால், தமிழர் பிரச்­சி­னையை அவர் சரி­யாக அணு­கு­கிறார் என்ற ஒரு விம்­பத்தை நரேந்­திர மோடியின் மனதில் ஏற்­ப­ டுத்த முடியும். புது­டில்­லிக்கு அழைத்துச் செல்­வ­தற்கு அர­சாங்­கத்தின் கையில் எந்த பொருத்­த­மான தமிழ் அர­சி­யல்­வா­ தியும் இருக்­க­வில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவா­ னந்­தா­வுக்கு, இந்­தி­யாவில் வழக்கு நிலு­வையில் உள்­ளதால் பிரச்­சினை.முன்னாள் புலி உறுப்­பினர் என்­பதால், பிர­தி­அ­மைச்சர் கரு­ணாவை அங்கு கூட்டிச் செல்ல முடி­யாது. எனவே, ஒரே கல்லில் இரண்டு காய்­களை வீழ்த்­தவே விக்­னேஸ்­வ­ரனைத் தெரிவு செய்­தி­ ருந்தார்.

ஆனால், அவர் மறுத்து விட, வேறு வழி­யின்றி யாழ். மாந­கர முதல்வர் யோகேஸ்­வரி பற்­கு­ண­ரா­ஜா­வையும், அமைச்சர் ஆறு­முகன் தொண்­ட­மா­ னையும் அழைத்துச் சென்­றி­ருந்தார்.வடக்கு மாகாண முதல்­வரை இந்­தியப் பிர­தமர் முன்­பாக நிறுத்தி, இரா­ஜ­தந்­திர ரீதி­யாக தனக்கு ஒரு கவ­சத்தை ஏற்­ப­ டுத்திக் கொள்­வதே ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் திட்டம்.

அவ்­வாறு அவரை முன்­னி­ றுத்­தி­யி­ருந்தால், வடக்கு மாகாண சபைக்கும், இலங்கை அர­சாங்­கத்­ திற்கும் இடையில் நெருங்­கிய சுமு­க­ மான உற­வுகள் இருப்­ப­தான தோற்றம் புது­டில்­லியில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும்.அதற்­கான வாய்ப்பை முதல்வர் விக்­ னேஸ்­வரன் வழங்­க­வில்லை.

ஒரு­வேளை, வடக்கு மாகாண சபை­யுடன், அர­சாங்கம் இணக்­க­மான போக்கை கடைப்­பி­டித்­தி­ருந்தால், நிச்­ச­ ய­மாக இந்த அழைப்பை அவரால் நிரா­ க­ரித்­தி­ருக்க முடி­யாது. இத­னி­டையே, விக்­னேஸ்­வரன் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு ஜனா­தி­பதி மஹிந்­த­வுடன் புது­ டில்லி சென்­றி­ருந்தால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் அது பெரும் பிரச்­சி­ னை­யாக உரு­வெ­டுத்­தி­ருக்கும். அது­ மட்­டு­மன்றி, தமிழ்­நாட்­டிலும் அது அவ­ ருக்கு எதி­ரான நிலைப்­பா­டு­களை எடுக்க கார­ண­மா­கி­யி­ருக்கும்.

இந்த விட­யத்தில், அவர் ஒரு சில மணி­நே­ரங்­க­ளுக்குள் எடுத்த துரி­த­ மான முடிவு, தமிழர் தரப்பைப் பொறுத்­த ­வ­ரையில் தவ­றா­ன­தாக கரு­தப்­ப­ட­ வில்லை. அதே­வேளை, கூடிய விரை வில் வடக்கு மாகாண முதல்வர் விக்­ னேஸ்­வ­ர­னுக்கு புதுடில்லியின் கதவுகள் திறக்கப்படக்கூடும். ஏனென்றால், நரேந்திர மோடி அரசாங்கம், இலங்கைப் பிரச்சினை விவகாரத்தில் ஒரு சம நிலை அணுகுமுறையைப் பேணும் என்று தெரிகிறது.

அதைவிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுத்த அழைப்பினால் ஏற்பட்டுள்ள இடைவெளி யையும், கோபத்தையும் குறைத்துக் கொள்ளவும், வேண்டியுள்ளது. எனவே, விக்னேஸ்வரனையோ, தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பையோ, அழைத்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

அத்தகையதொரு அழைப்பு, அரசாங்கத்தைப் பொறுத்தவரை, விரும்பத்தக்கதொன்றாக இருக்காது. இனிமேலாவது, அரசாங்கம், வடக்கு மாகாண சபையுடன் அரவணைத்துச் செயற்படவும், அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முன்வந்தால் தான், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்கலாம். தமிழர் தரப்பை அரவணைக்காமல், சர்வதேச அழுத்தங்களில் இருந்து ஒருபோதும் விடுபட முடியாது.

– நெற்றிப்பொறியன் –

3505791529

 

SHARE