இந்தோனேசியாவில் இருந்து அகதிகள் படகு ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதில் 97 பேர் பயணம் செய்தனர். மலாக்கா ஜலசந்தி அருகே பான்டிங் கடற்கரை நகரில் அருகே 3 கி.மீட்டர் தூரத்தில் வந்த போது அந்த படகு கடலில் மூழ்கியது.
எனவே அதில் பயணம் செய்தவர்கள் கடலில் தத்தளித்தனர். அதை பார்த்த மலேசிய கடற் பாதுகாப்பு பிரிவினர் ஒரு படகை அனுப்பினர்.
விரைந்து சென்ற அவர்கள் 31 பேரை மட்டுமே மீட்டனர். மேலும் 66 பேரை மீட்க முடியவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அவர்களின் கதி என்ன என்று தெரிய வில்லை.
அவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருந்தாலும் 2 படகுகளை அனுப்பி அவர்களை தேடும் பணி நடக்கிறது. மரத்தினால் ஆன அந்த படகு பயணம் செய்ய ஏற்றதல்ல என மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.