பெண்ணுக்கு அருகே சொகுசாக படுத்து உறங்கிய பாம்பு!!

845

snake

ஸ்கொட்லாந்தில் பெண்ணின் அருகே, படுத்து உறங்கிய 4 அடி பாம்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கரித்நிவான் என்பவர், 4 அடி நீளம் உள்ள பாம்பை வளர்த்து வருகிறார். இரவு நேரத்தில் இந்த பாம்பு பக்கத்து வீட்டுக்காரரான கரோலினின் வீட்டுக்குள் நுழைந்துள்ளது.

படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த கரோலினின் அருகில் படுத்து உறங்கியுள்ளது. இதை அறியாத கரோலின் காலையில் கண்விழித்து பார்த்தபோது தான், அருகில் 4 அடி பாம்பு படுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.

இதனை கேட்ட இவரது கணவர் ஓடி வந்து பாம்பை விரட்ட முயன்றுள்ளார், அப்போது தான் கரித்நிவான் வளர்த்து வந்த பாம்பு என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக விரைந்து வந்த கரித்நிவான் பாம்பை பிடித்துக் கொண்டு போயுள்ளார்.

விஷம் இல்லாத காரணத்தால் இந்த பாம்பை வளர்த்து வருவதாக கரித்நிவான் தெரிவித்துள்ளார். பாம்பு கடித்தது பற்றி கரோலின் கூறுகையில், நான் தூங்கி கொண்டிருக்கும் போது பாம்பு வந்து எனது அருகில் தூங்கிகொண்டிருந்தது, இதை நான் கவனிக்கவில்லை.

இரவு நேரத்தில் ஏதோ உடம்பில் ஊர்வது போல இருந்தது, பின்னர் கண்விழித்து பார்த்த போது தான் பாம்பு என்னை கடித்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன், தற்போது மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

SHARE