ஒரு கடைசி முத்தம்: மரணத்தின் பிடியில் உள்ள மனைவி குறித்து உருகிய கணவர்

391

புற்றுநோய் காரணமாக விரைவில் மரணமடையவுள்ள தனது மனைவி குறித்து இணையபக்கத்தில் கணவர் எழுதியுள்ள பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பாடகர்களான ஜோய் மற்றும் ரோறி தம்பதியினர் ஏராளமான பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இசை துறையில் பாரிய விருதான கிராமி விருதுக்கும் இந்த தம்பதியினர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜோய் ஃபீக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது நோயை குணப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது வாழ்வின் இறுதிகட்டத்தில் உள்ளார். இதுகுறித்து அவரது கணவர் ரோறி தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ளதாவது, எனது மனைவி தற்போது தூங்கவுள்ளார்.

அவரது உடல் விரைவில் தனது செயல்களை நிறுத்திவிடும்.

இன்று காலை அவரை பரிசோதித்த செவிலியர் ஜோய் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

தனது மகளின் 2வது பிறந்த நாளை பார்ப்பதற்காக மட்டுமே இத்தனை நாட்களாக காத்திருந்த ஜோய், மகள் இண்டியானாவின் பிறந்தநாள் முடிந்ததையடுத்து தற்போது அவர் நித்திரையடையவுள்ளார்.

ஒரு கடைசி முத்தம் என இது குறித்து எழுதியுள்ள ரோறி, மரணமடைவது குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும் நான் விரும்பிய அனைத்தையும் செய்துவிட்டேன்.

நான் விரும்பிய வாழ்க்கையையே வாழ்ந்துள்ளேன் என ஜோய் கூறியதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

SHARE