சம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.முதன் முதலாக பிலிப்பைன்ஸ்சில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 4 அங்கு அளவுடையதும், 800 x 400 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Quad core 1.2Ghz Processor, பிரதான நினைவகமாக 768MB RAM மற்றும் 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர Android 5.1 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென VGA கமெரா என்பனவற்றுடன் 1500 mAh மின்கலத்தினையும் கொண்டுள்ளது. |