சர்க்கரை நோயாளிகளுக்கான “செம்பருத்தி பூ தோசை”

328
எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கையின் கொடை தான் செம்பருத்தி.

அழகுக்காக பலரும் வளர்த்தாலும் இதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.

உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொண்டால் சோர்வு நீங்கும், இதன் இலைகளை கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன் சீராகவும் இருக்க உதவுகிறது.

தொடர்ந்து இதை பயன்படுத்தினால் ரத்தத்தில் கொழுப்பை குறைப்பதுடன் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

இந்த பூவைக் கொண்டு தோசை செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது.

அதுமட்டுமின்றி பெண்கள் மாதவிடாய் நேரங்களில் சாப்பிட்டு வருவதும் நல்லது.

செய்முறை

செம்பருத்தி இதழ்களை அரைத்து தோசை மாவுடன் கலக்கிக் கொள்ளவும்.

இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தோசை வார்த்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

SHARE