ஐ.சி.சி. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய இளம் வீரர் விராட் கோலி முதலிடத்தை இழந்தார். வங்காளதேச தொடரில் பங்கேற்காததால் முதலிடத்தை இழந்த விராட் கோலி, 868 புள்ளிகளுடன் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை விட 4 புள்ளிகள் அதிகம் பெற்ற தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்வியர்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். டெஸ்ட் தரவரிசையிலும் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஷிகர் தவான் 8-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திலும், ரோகித் சர்மா 17-வது இடத்தில் இருந்து 3 இடங்கள் பின்தங்கி 20-வது இடத்திற்கும் சென்றனர். வங்கதேச தொடரில் சிறப்பாக விளையாடிய ரெய்னா 2 இடங்கள் முன்னேறி 27-வது இடத்தில் உள்ளார்.
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இரண்டு இடங்கள் பின்தங்கி முறையே 7 மற்றும் 17வது இடங்களில் உள்ளனர். ஆறுதல் அளித்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 8 இடங்கள் முன்னேறி 78-வது இடத்தில் உள்ளனர். வங்கதேச தொடரில் 2வது போட்டியில் 6 விக்கெட் எடுத்து சாதனை படைத்த ஸ்டுவார்ட் பின்னி 23 இடங்கள் முன்னேறி தற்போது 206-வது இடத்தில் இருக்கிறார்.