ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சைதமா என்ற இடத்தில் உள்ள ‘ரோபோ’ (எந்திர மனிதன்) தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் அபே பார்வையிட்டார். அங்கு உருவாக்கப்படும் பலதரப்பட்ட ரோபோக்களின் செயல்பாடுகளை ரசித்தார்.
பின்னர் அங்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வருகிற 2020–ம் ஆண்டில் டோக்கியோவில் 32–வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் அறிவியல் வளர்ச்சி சார்ந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
அந்த வகையில் முதன் முறையாக ரோபோக்கள் பங்கேற்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேலும் ‘ரோபோக்கள்’ இடையே பலவித போட்டிகளும் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
ஜப்பானில் ‘ரோபோ’க்கள் அதிக அளவில் தொழில் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இங்கு மனிதர்களை போன்று பேசும் திறன் மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் போன்ற தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.