இயக்குனரை பாடாய் படுத்திய ஹீரோயின் 

487



டெல்லியை சேர்ந்த ஆங்கில நாடக நடிகையை தமிழ் வசனம் பேசி நடிக்கவைக்க படாதபாடுபட்டார் இயக்குனர். நவீன் சந்திரா, சலோனி லுத்ரா, நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் சரபம். அருண் மோகன் டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது: சரபம் என்றால் என்ன என்கிறார்கள். சிங்க முகமும், பறவை உடலும் கொண்ட ஒரு மிருகத்தின்பெயர்தான் சரபம். இது பண்டை கால புராண கதைகளில் வரும். சரபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. 3 கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. இப் படத்தின் ஹீரோ நவீன் சந்திரா.

படத்தின் 2வது காட்சியே 15வது மாடியிலிருந்து தலைகீழாக தரையை நோக்கி அவரை தூக்கிப்போட்டு அந்தரத்தில் தொங்கவிட்டு மிரட்டும் காட்சி படமாக்கப்பட்டது. எனக்கு உயரம் என்றால் பயம். எனவே நான் ஷாட் மட்டும் கூறிவிட்டு கீழே சென்று நின்றுகொண்டு மானிட்டரில்(திரை) பார்த்துதான் காட்சியை படமாக்கினேன். அடுத்து பல நாட்கள் காட்சிகள் படமாக்க வேண்டி இருந்தது. ஒரேயொரு கயிறு மட்டும் ஹீரோவின் பாதுகாப்புக்கு கட்டப்பட்டு தொங்கவிட்டிருந்ததால் காட்சி முடியும் வரை எனக்கு பயம் இருந்துகொண்டே இருந்தது.

 

ஹீரோயின் சலோனி லுத்ரா டெல்லியை சேர்ந்தவர். இவர் ஆங்கில நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்றவர். தமிழ் வசனம் பேசுவதற்குள் படுத்திஎடுத்துவிட்டார். ஆனால் நடிப்பில் அந்த கவலையை மறக்க வைத்துவிட்டார். சி.வி.குமார், டிசிஎஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். பிரிட்டோ மைக்கேல் இசை அமைக்கிறார். இவ்வாறு இயக்குனர் அருண் மோகன் கூறினார்

 

SHARE